இந்த நாளில் அன்று
(18.03.1970)
ரூ.300 வரை வருமானம் உள்ளவருக்கும் படி அரிசி - ஏப்ரல் முதல் சென்னை, கோவை நகரங்களில் அமல்
ரூபாய்க்கு படி அரிசி திட்ட சலுகை இதுவரை மாதம் ரூ.200-க்கு உட்பட்ட மக்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது. இந்த வருமான வரம்பு இப்பொழுது உயர்த்தப்பட்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மாத வருமானம் ரூ.300 வரை உள்ளவர்களுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்படும். இது சென்னை, கோவை பகுதிகளுக்கு மட்டுமே உண்டு.
இந்த புது சலுகையை உணவு அமைச்சர் ஸ்ரீ ப.உ.சண்முகம் புதன்கிழமையன்று சட்டசபையில் உணவு, கால்நடை மான்யக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கையில் அறிவித்தார்.
வருமான வரம்பு உயர்த்தப்பட வேண்டுமென்று சட்டசபையில் அங்கத்தினர்கள் கோரியதை முதலமைச்சருடன் அவர் கலந்து விவாதித்ததாகவும், முதலமைச்சர் மேற்கண்டவாறு சலுகை அளிக்க ஏற்றுக்கொண்டார் என்றும் அவர் அறிவித்தார்.
ஸ்ரீ ஏ.வி.பி.ஆசைத்தம்பி (திமுக) உடனடியாக எழுப்பிய ஒரு விளக்கத்துக்கு உணவு அமைச்சர் பதிலளிக்கையில், சர்க்கரை ரேஷன் கார்டில் காட்டப்பட்டிருக்கிற வருமான கணக்கு ஒன்றைத்தான் அரசு சான்றாக எடுத்துக்கொள்ளுமே தவிர, புதிதாக வருமான சான்றிதழ்களை பெற்று பரிசீலிப்பதோ, அல்லது திடீரென்று வேலை இழந்து அதனால் வருமானம் குறைந்துள்ள கணக்குகள், குடும்பம் பிறகு பிரிந்ததால் வருமானம் குறைந்து இருக்கும் கணக்கு ஆகியவைகள் எதையும் அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும், இது விஷயத்தில் புதிதாக எந்த 'விவகாரத்தையும்' உணவு இலாகா வைத்துக்கொள்ளாது என்றும் இதற்கு சகல கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

