தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசைக் காட்டிலும் கர்நாடக அரசு இன்னும் ஊழலானது என்று காமராஜ், ஹோசூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் கூறினார். இம்மாதிரி அரசுகளை ஒழிக்க வேண்டும் என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
திமுக அரசு சுயநலமிகளாலும் கொள்ளை லாபக்காரர்களாலும் நடத்தப்படுகிறது என்றும், அந்த ஆட்சி மக்கள் நலனுக்காகவன்றி ஆட்சி நலனுக்காகவே நடத்தப்படுகிறது என்றும், திமுக ஆட்சியில் இப்பொழுது எங்கு பார்த்தாலும் பொய்யும் மோசடியுமே மலிந்து காணப்படுகிறது என்றும் காமராஜ் கூறினார்.
எம்ஜிஆரையும் காமராஜ் கடுமையாகத் தாக்கினார். இவரும் திமுக ஊழலாட்சிக்கு உடந்தையாக இருந்துவிட்டு, தனிப்பட்ட விரோதத்தின் பேரிலேயே தனிக்கட்சி ஆரம்பித்து நல்லவன்போல் இப்பொழுது வேஷம் போடுகிறார் என்றும் காமராஜ் சொன்னார்.
தமிழ்நாட்டில் பஞ்சம் போன்ற நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு மழை பொய்த்தது ஒரு காரணம் என்றாலும், அவசர நிலைமைக்கு வேண்டிய கையிருப்பு வைத்துக்கொள்ளாதது திமுக அரிசின் குற்றம்தான் என்றும், ஒரு சாதாரண விவசாயி அவசரத் தேவையை எதிர்பார்த்து கையிருப்பு வைத்துக்கொள்வதைப்போலக்கூட இந்த அரசு வைத்துக்கொள்ளவில்லை என்றும் காமராஜ் மேலும் கூறினார்.
உணவு தானியங்கள் எங்கு கிடைத்தாலும் கொள்முதல் செய்து குறைந்த விலையில் ஏழைகளுக்கு நியாயமாக விநியோகிக்க வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

