போக்குவரத்து விதிகளை மீறியது சம்பந்தமான குற்றங்களை விசாரிக்க மீண்டும் நடமாடும் நீதிமன்றங்களை ஏற்படுத்துவது குறித்தும், இக்குற்றங்களை விசாரிப்பதற்கென்றே தனி மாநகர மாஜிஸ்டிரேட் கோர்ட்டுகளை ஏற்படுத்துவது குறித்தும் மாநில அரசாங்கம் பரிசீலனை செய்துகொண்டிருக்கிறது.
1977 இறுதி வரை சென்னை நகரில் மூன்று நடமாடும் கோர்ட்டுகள் இயங்கி வந்தன. விதிமுறைகளைத் தாங்கள் மீறும்போது, இந்த நடமாடும் கோர்ட்டுகளின் விசாரணைக்குத் தாங்கள் உள்பட நேருவதாகவும் அப்போது அலுவலகங்களுக்குப் போவது காலதாமதமாவதாகவும் அலுவலகம் செல்பவங்கள் புகார் கொடுத்ததன் பேரில் அவை ரத்து செய்யப்பட்டன.
என்றாலும், இந்த நடமாடும் நீதிமன்றங்கள் இல்லாததால் போக்குவரத்து விதிகளை அமல் செய்வது பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. சாலைகளைப் பயன்படுத்துபவர்கள் விதிகளை அவ்வளவு கவனமாக கடைப்பிடிப்பதில்லை. சாதாரண நீதிமன்றங்களுக்கு போக்குவரத்து சம்பந்தமான வழக்குகள் சென்றால், விசாரணை நீடித்துக்கொண்டே போகிறது. ஆகையால், அப்படி வழக்குகளை பதிவு செய்ய போக்குவரத்து கான்ஸ்டபிள்களும் ஆர்வமாய் இருப்பதில்லை.
போக்குவரத்து வழக்குகளை விசாரிப்பதற்கென்றே மூன்று மாநகர மாஜிஸ்டிரேட் நீதிமன்றங்களை அமைக்குமாறு போக்குவரத்து போலீஸார் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். போக்குவரத்து சம்பந்தமான ஏராளமான வழக்குகளின் விசாரணை முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

