சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று(28.03.1980)பதவிகளைக் குறைத்ததன் மூலம் நிர்வாகச் செலவில் ரூ.36.98 கோடி மிச்சம்: நிதி மந்திரி ஆர்.வி. தகவல்

அரசாங்கப் பதவிகளின் எண்ணிக்கையைக் குறைத்ததன் மூலம் இதுவரை நிர்வாகச் செலவில் ரூ.36.98 கோடியை சர்க்கார் மிச்சப்படுத்த முடிந்துள்ளதாக நிதி மந்திரி ஆர்.வெங்கட்ராமன் லோக சபையில் தெரிவித்தார்.

Updated On :27 மார்ச் 2015, 11:16 am

அரசாங்கப் பதவிகளின் எண்ணிக்கையைக் குறைத்ததன் மூலம் இதுவரை நிர்வாகச் செலவில் ரூ.36.98 கோடியை சர்க்கார் மிச்சப்படுத்த முடிந்துள்ளதாக நிதி மந்திரி ஆர்.வெங்கட்ராமன் லோக சபையில் தெரிவித்தார்.

எம்.சி.டாகா கேள்விக்கு அவர் பதிலளித்தார். நிதி அமைச்சகத்தில் மட்டும் 5011 பதவிகள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டது என்றும், இவற்றை குறைத்ததன் மூலம் ரூ.3.43 கோடி மிச்சப்படுத்தப்பட்டது என்றும் மந்திரி குறிப்பிட்டார்.

கூடுதல் ஊழியர்களை சர்க்கார் எவ்வாறு சமாளிக்கும் என்று திரிபீப் சௌதுரி கேட்டதற்கு, பதவிகள் மட்டுமே குறைக்கப்படுவதாக வெங்கட்ராமன் பதலளித்தார். புதுப் பதவிகளை தோற்றுவிக்க அனுமதி கோரப்படும் போதெல்லாம் ஊழியர் ஆய்வு பிரிவு இத்தகைய புது பதவிகள் தேவைதானா என்பதை மிகக் கவனமாக ஆராய்வதாக அவர் கூறினார்.

திட்டமல்லாத செலவினங்களைப் பற்றி சில மெம்பர்கள் கேட்டபோது, திட்டமல்லாத செலவு என்பது நிர்வாகச் செலவு மட்டுமல்ல என்று அவர் விளக்கினார். பாதுகாப்பு செலவு கடன்கள் மீது வட்டி செலுத்துதல், பல்வேறு மாநிலங்களுக்கு பண உதவி ஆகியவை திட்டமல்லாத செலவில் சேரும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.