பட்டப் படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு அளவில் பாடத் திட்டத்தில் பெரிய மாற்றங்கள் செய்வது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக தமிழக கல்வி அமைச்சர் அரங்கநாயகம் கூறினார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு அவர் பேசினார். நாட்டுக்கும் மாணவர்களுக்கும் நன்மை தரும் வகையில் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்குவதில் கல்வி நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் ஒரு இறுதியான திட்டம் உருவாகும்.
நம் நாட்டு கல்வித்தரம் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டுமென்பதே இதன் நோக்கம். ஏற்கெனவே, ப்ளஸ்டூ முறைக் கல்வியால் அனைத்து மட்டத்திலும் பாடத்திட்டங்கள் அதிகமாக்கப்பட்டுள்ளன.
சமூகரீதியில் பொருத்தமற்ற பாடங்களை நீக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் அமைதியின்மை அதிகமாகக் காணப்படுவதற்கு காரணமாக உள்ள சமூக விரோத சக்திகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.
தற்போது இம்மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி நிலையங்களில் 50 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேறு எங்கும் இந்தச் சலுகை அளிக்கப்படவில்லை. ஏற்கெனவே இட ஒதுக்கீடு பற்றி கிளர்ச்சிகள் துவங்கிவிட்டன. ஆகவே மற்றவர்களைவிட பிற்பட்ட வகுப்பு மாணவர்கள் தங்கள் படிப்பில் மேலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும். தற்போது அளிக்கப்பட்டுள்ள சலுகையை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளாவிடில் சமூகத்தில் மீண்டும் பின்தங்கிய நிலைமையை அடைய நேரிடும். அடுத்த முறை இட ஒதுக்கீடு செய்யும்போது அவர்களுக்கு இச்சலுகை கிடைக்காமல் போகக்கூடும்.
முன் யோசனையுடன் தாராள மனப்பான்மையுடனும் கல்வி நிலையங்களைத் துவக்கிய கிறிஸ்தவ மிஷினரிகள் பாராட்டுக்குரியவர்கள். ஹிந்து மதத் தலைவர்கள் சமூகப் பொறுப்பு அற்றவர்களாக உள்ளனர். மக்களின் முட்டாள்தனத்தை சாதகமாக்கிக்கொள்வதில்தான் அவர்கள் நிபுணத்துவம் பெற்றுள்ளனர். ஹிந்து மதத்தைச் சேர்ந்த பல்வேறு மதத் தலைவர்களும் சமூக மற்றும் மனிதகுல நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்ள முன்வர வேண்டும் என்றார் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

