தமிழ்நாட்டின் தலைநகரை சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றும் யோசனை பற்றி அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தாம் ஆலோசனை கலக்க விரும்புவதாக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன், நிருபர்களிடம் கூறினார்.
ஆனால், மாநிலத்தில் வறட்சி நிலைமை நிலவுவதால் இதைப்பற்றி ஆலோசிப்பதற்குத் தற்போது தகுந்த சமயம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிரதமர் இந்திரா காந்தியை வரவேற்க வந்திருந்த திமுக தலைவர் மு.கருணாநிதியை போலீஸ் அதிகாரி ஒருவர் பிடித்துத் தள்ளியதாகக் கூறப்படும் புகார் குறித்தும் எம்ஜிஆரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அந்த போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் கோரப்பட்டிருக்கிறது என்றும், அவர் விளக்கம் வந்த பிறகுதான் இவ்விஷயத்தில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும் என்றும் அவர் பதிலளித்தார்.
உணவு தட்டுப்பாடு குறித்து மாநில அரசைக் கண்டித்து இ.காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நடத்திவரும் உண்ணாவிரதங்களைப் பற்றி முதலமைச்சர் வன்மையாகக் கண்டித்தார்.
உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு எதற்காக உண்ணாவிரதம் இருக்கிறோமென்பதே தெரியாது என்றும் அவர் கேலி செய்தார். இப்படி உண்ணாவிரதங்கள் இருப்பதால் அரிசித் தட்டுப்பாட்டின் கடுமை குறையலாம் என்றும் அவர் தமாஷாகக் குறிப்பிட்டார்.
அ.இ.அண்ணா.தி.மு.க. கொள்கைப்படி கட்சியில் ஒருவர் ஒரு பதவிதான் வகிக்க முடியும். எனவே அக்கொள்கைப்படி மாவட்ட செயலாளர்களாகவும் உள்ள கழக எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், எம்பிக்கள் தங்களுடைய மாவட்ட செயலாளர் பதவிகளை ராஜிநாமா செய்யுமாறு கோரப்படலாம் என்றும் அக்கழக ஸ்தாபகரான எம்.ஜி.ராமச்சத்திரன் வேறு ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.
ஆனால், இக்கொள்கையை அமல் செய்வதில் இங்குமங்குமாக சில விதிவிலக்குகள் இருக்கலாம். எனினும் மாவட்ட செயலாளர் பதவிகளைப் பொறுத்தமட்டில் இவ்விதிவிலக்கு இராது என்றும் முதலமைச்சர் சொன்னார்.
(சென்னை நகரில் ஜேப்பியார் (எம்எல்சி), தென்னார்க்காட்டில் ஹீராசந்த் (எம்பி), திருச்சி மாவட்டத்தில் கே.சவுந்திரராஜன் (எம்எல்ஏ), மதுரை மாவட்டத்தில் சேடப்பட்டி முத்தையா (எம்எல்ஏ) போன்றோர் மாவட்ட செயலாளர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு

மேல்மருவத்தூரில் வேட்பாளா்கள் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

