சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

இந்த நாளில் அன்று (01.04.1984)ஸ்டேட் வங்கி சிப்பந்திகள் அரசு ஊழியர்களல்ல - ஹைகோர்ட் தீர்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கிறவர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்கள் அல்ல என்று சென்னை ஹைகோர்ட் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தது.

Updated On :31 மார்ச் 2015, 10:44 am

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கிறவர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்கள் அல்ல என்று சென்னை ஹைகோர்ட் டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பளித்தது.

பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகளுடைய 9 மண்டல சங்கங்களின் கூட்டமைப்பு போட்டிருந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மோகன், டி.சத்யதேவ் ஆகியோர் விசாரித்து தீர்ப்பளித்தனர்.

பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் வேலை சம்பந்தப்பட்ட விதிமுறைகள் மேற்படி வங்கியின் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதல்ல என்றும், அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதாகச் செய்யும்படி மேற்படி வங்கி நிர்வாகத்தை ஹைகோர்ட் வற்புறுத்த முடியாது என்று ஏற்கெனவே நீதிபதி நைனார் சுந்தரம் கொடுத்திருந்த தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட அப்பீலை டிவிஷன் பெஞ்சு விசாரித்தது.

பாரத ஸ்டேட் வங்கியை அமைத்து நாடாளுமன்றம் செய்த சட்டத்தின் 17-வது பிரிவு வங்கியின் நிர்வாகத்தை ஒரு மத்திய குழுவின் பொறுப்பில் விட்டது. 43-வது பிரிவு அதிகாரிகளை நியமித்துக்கொள்வதற்கான அதிகாரத்தை அந்த மத்திய குழுவிற்கு அளித்துள்ளது. 49-வது பிரிவு விதிகளை வகுப்பதற்கான அதிகாரத்தை அளிக்கிறது. 50-வது பிரிவு சட்டத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பற்றி விதிமுறைகளை வகுக்க பாரத ஸ்டேட் வங்கியின் மத்திய குழுவிற்கு அதிகாரம் அளிக்கிறது.

இதன்படி அதிகாரிகளின் கடமைகள் நடத்தை பற்றிய விதிகளைச் செய்யலாம். மத்திய அரசின் முன் அனுமதியோடும், ரிசர்வ் வங்கியை கலந்துகொண்டும் விதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால் அதிகாரிகள் அரசாங்க சட்டரீதியான ஒரு அந்தஸ்தை பெற்று அரசாங்க உத்யோகஸ்தர் ஆவார்கள்.

1957-ல் மத்திய அரசின் முன் அனுமதி பெறாமலும், ரிசர்வ் வங்கியைக் கலந்துகொள்ளாமலும் வங்கியின் அதிகாரிகள் நியமனம், வேலை நிலைமை ஆகியவற்றை முறைப்படுத்தும் விதித் தொகுப்பு ஒன்றை வகுத்து அறிவித்தது. அந்த விதித் தொகுப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்து ஒவ்வொரு அதிகாரியும் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்று கோரப்பட்டனர்.

ஆக, அந்த அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கியின் மத்திய வாரியம் தன் அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள் என்பதாக பாவித்து வருகிறது. இது நாடாளுமன்றம் நிறைவேற்றிய பாரத ஸ்டேட் வங்கி சட்டத்துக்கு புறம்பானதாகும் என்று மனுதாரர்கள் கூறியிருந்தனர். ஆகவே, அந்த சட்டத்துக்கு உட்பட்டு விதிமுறைகளைச் செய்யும்படி பாரத ஸ்டேட் வங்கிக்கு ஹைகோர்ட் உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர்கள் கேட்டிருந்தனர்.

வேலை நிலைமை பற்றிய விதித் தொகுப்பு சட்டத்துக்கு அப்பாற்பட்டு வங்கியின் மத்திய வாரியமே வகுத்தவையாக இருக்கிறது. அதன்படி அதிகாரிகள் உடன்படிக்கையின் அடிப்படையிலேயே வேலை செய்கிறவர்கள் ஆகிறார்கள். வங்கியின் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு விதிகளை வகுக்கும்படி கூற கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று நீதிபதிகள் கூறினர்.

வங்கியின் அமைப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தியே உடன்படிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டேட் வங்கி அதிகாரிகள் அரசாங்க ஊழியர்கள் அல்ல. விதிகளை வேறு பிரிவின் கீழ் செய்து அவர்களை அரசாங்க சட்டத்தின் கீழ் உட்பட்ட ஊழியர்கள் என்று அறிவிக்க கோர்ட்டுக்கு அதிகாரமில்லை என்று நீதிபதிகள் கூறினர்.

அப்பீல் தள்ளுபடி ஆயிற்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.