தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று(02.05.1960)சர்க்கார் கட்டுப்பாடு, கல்வி ஸ்தாபனங்களை நசுக்கியே தீரும் - மத்திய அமைச்சர் மொரார்ஜி எச்சரிக்கை

கல்வி ஸ்தாபனங்கள் மீது சர்க்கார் கட்டுப்பாடு செலுத்துவது குறித்து இந்திய சர்க்கார் நிதி மந்திரி ஸ்ரீ மொரார்ஜி தேசாய் எச்சரித்தார்.

News image
Updated On :1 மே 2015, 10:45 am

கல்வி ஸ்தாபனங்கள் மீது சர்க்கார் கட்டுப்பாடு செலுத்துவது குறித்து இந்திய சர்க்கார் நிதி மந்திரி ஸ்ரீ மொரார்ஜி தேசாய் எச்சரித்தார்.

கல்வி ஸ்தாபனங்களுக்கு நிதி உதவி அளிக்க சர்க்கார் கடமைப்பட்டுள்ளபோதிலும், அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த அது முற்படக்கூடாது என்றார். கல்வி ஸ்தாபனங்கள் மீது சர்க்கார் கட்டுப்பாடு செலுத்தினால் அவை நசுங்குண்டுபோகும் என்று கூறினார்.

அகமதாபாத்தில் ஒரு கல்லூரியில் அவர் பேசும்போது, சமூக அமைப்பை உருவாக்குவதில் கல்வி ஸ்தாபனங்களுக்கு உரிய பங்கை அவர் நினைவூட்டினார். மகிழ்ச்சி ததும்பும் சமூக அமைப்பை உருவாக்க வேண்டுமானால் மக்களிடையில் அஞ்சானெஞ்சத்தையும், சத்திய ஆர்வத்தையும் வளர்க்க வேண்டும் என்றும், கல்வி ஸ்தாபனங்களே இப்பணிக்கு ஏற்ற சாதனம் என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.