பாகிஸ்தான் ஜனாதிபதி அயூப் கான், ஷேப் அப்துல்லாவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். பிரதம மந்திரியின் இல்லத்தில் தங்கியிருக்கும் ஷேக் அப்துல்லாவிடம் இக்கடிதத்தை பாகிஸ்தான் ஹைகமிஷனர் நேரில் கொண்டு வந்து கொடுத்தார்.
பாகிஸ்தான் ஜனாதிபதியுடனும், அவரது சகாக்களுடனும் தகுந்த முறையில் யோசனை கலக்காமல் காஷ்மீர் சம்பந்தமாக இந்தியத் தலைவர்களுடன் எவ்விதத் தீர்வும் காணலாகாது என்று எழுதியிருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு மீண்டும் பாகிஸ்தான் ஜனாதிபதி, ஷேக் அப்துல்லாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அயூப் கான் தமது கடிதத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.
இந்தியத் தலைவர்களுடன் காஷ்மீர் வருங்காலம் பற்றி விவாதிப்பதாக வெளிப்படையாகத் தெரிகிறது,
ஐக்கிய நாடுகள் தீர்மானங்களில் எதிர்பார்க்கிறபடி காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு இணங்க காஷ்மீரின் வருங்காலம் முடிவு செய்யப்படும் என்று காஷ்மீர் மக்களுக்கு நாங்கள் மனப்பூர்வமான வாக்குக் கொடுத்திருப்பதைக் கருதியும், காஷ்மீரில் எங்களுக்கு ஜீவாதாரமான நல உரிமைகள் இருக்கிறதென்ற உண்மையைக் கருதியும், எங்களுடன் தகுந்தபடி யோசனை கலக்காமல் எந்தத் தீர்வும் காணப்படலாகாதென்ற எங்கள் கவலையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
இத்தகைய ஆலோசனை நடத்துவதற்கு இது பக்குவமான காலமென்று நீங்கள் கருதினால், உங்களை இங்கு வரவேற்று உங்களுடன் இவ்விஷயம் பற்றி விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைவோம் என்று அயூப் எழுதியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


