தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று (09.05.1967)ஸ்ரீ ஜாகிர் ஹுசேன் ராஷ்டிரபதியானார் - 107273 வோட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்

டாக்டர் ஜாகிர் ஹுசேன் ராஷ்டிரபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் மூன்றாவது ராஷ்டிரபதி. ஆசிரியராகவிருந்து இப்பதவிக்கு வந்தவர்களில் இவர் இரண்டாவது ஆகும். இந்தியாவின் முதல் முஸ்லிம் ராஷ்டிரபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

News image
Updated On :6 மே 2015, 8:51 am

டாக்டர் ஜாகிர் ஹுசேன் ராஷ்டிரபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்தியாவின் மூன்றாவது ராஷ்டிரபதி. ஆசிரியராகவிருந்து இப்பதவிக்கு வந்தவர்களில் இவர் இரண்டாவது ஆகும். இந்தியாவின் முதல் முஸ்லிம் ராஷ்டிரபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் முதலாக அவரை சந்தித்து மரியாதையைத் தெரிவித்துக்கொண்டவர் பிரதம மந்திரி இந்திரா காந்தியே.

வோட்டு எண்ணுதல் பிற்பகல் 2 மணிக்கு முடிவடைந்தது. வோட்டு விவரம்:

டாக்டர் ஹுசேன் - 4,71,244.

ஸ்ரீ கே. சுப்பாராவ் - 3,63,971

வித்தியாசம் - 1,07,273

பார்லிமெண்டு வோட்டுகளில் மட்டும் டாக்டர் ஹுசேனுக்கு ஸ்ரீ சுப்பாராவைவிட 97,000 அதிகமாகக் கிடைத்தது.

பார்லிமெண்டு வோட்டுகளும், மேற்கு வங்காளம் நீங்கலாக மற்றெல்லா அசெம்பிளிகளின் வோட்டுகளும் எண்ணி முடித்தபோது டாக்டர் ஹுசேன் 101083 வோட்டுகள் அதிகம் பெற்றிருந்தார். ராஜ்யங்களின் வோட்டுகளைப் பரிசீலித்ததில் காங்கிரஸ் கட்சியை மீறி வோட்டுப் போட்டவர்கள் அதிகமில்லை எனலாம். ஆந்திராவில் மட்டும் 15 மெம்பர்கள் மீறியதாக நம்பப்படுகிறது.

பார்லிமெண்டு மெம்பர்களில் 447 பேர் டாக்டர் ஹுசேனுக்கும், 278 பேர் ஸ்ரீ சுப்பாராவுக்கும் வோட்டளித்தனர். ஒவ்வொரு வோட்டுக்கும் மதிப்பு 576.

ராஷ்டிரபதியாகப் பொறுப்பேற்க உள்ள ஹுசேன், ரேடியோ பேட்டியில் கூறியதாவது:

ராஷ்டிரபதியின் பொறுப்புகள் லேசாக இருக்கவில்லை என நினைக்கிறேன். முன்பு இருந்ததைவிட இப்போது அவை அதிக கனமாக இருக்கக்கூடும். ஆனால் நான் பொறுத்துப் பார்ப்பேன்.

உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்கள் போற்றும் சில பண்புகளை பிரதிபலிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தனி நபர் நடத்தையிலும், சமூக நடத்தையிலும் தூய்மையையும், பொது வாழ்வில் காந்தீய கண்ணோட்டத்தையும், தேசிய நோக்கத்தில் கல்வி பிரதான கருவியாக இருக்க வேண்டும் என்றும் என்னிடம் மக்கள் எதிர்பார்த்தால் வியப்படைய மாட்டேன்.

ராஷ்டிரபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது முதலில் என் மனத்தில் பணிவு எண்ணம் ஏற்பட்டது. செயலைக் கெடுக்கும் பணிவு அல்ல. ஆனால், வளர்ந்து படிப்பினை கற்று சேவை செய்பவர்களின் குணமாகிய பணிவை உணர்ந்தேன். சிறந்த உழைப்புக்குத் துணிவும் உறுதியும் கொடுக்கும் பண்பை உணர்ந்தேன். நாம் பேசுவதை குறைத்து சச்சரவைக் குறைத்து, கடுமையாக உழைத்து, ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.