தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

இந்த நாளில் அன்று (15.05.1973)அரசுடைமை பாங்குகளில் அளவு மீறி ஓவர்டைம் ஏன்? - பாங்கு நிர்வாகிகள் கவனிப்பதாக சவாண் தகவல்

பாங்கு ஊழியர்கள் ஓவர்டைம் செய்து அதிகப்படி ஊதியம் பெற நியாயமான காரணங்கள் இருக்கலாம் என்றாலும், ஓவர்டைம் செய்வதை ஒரு உரிமையாகக் கருதும் போக்கு ஊழியர்களிடையே காணப்படுகிறது என்று நிதி மந்திரி சவாண்,

News image
Updated On :13 மே 2015, 12:19 pm

பாங்கு ஊழியர்கள் ஓவர்டைம் செய்து அதிகப்படி ஊதியம் பெற நியாயமான காரணங்கள் இருக்கலாம் என்றாலும், ஓவர்டைம் செய்வதை ஒரு உரிமையாகக் கருதும் போக்கு ஊழியர்களிடையே காணப்படுகிறது என்று நிதி மந்திரி சவாண், ராஜ்ய சபையில் கூறினார்.

14 பாங்குகள் தேச உடைமையாக்கப்பட்ட பின் அவற்றில் ஓவர்டைம் ஊதியம் பெருகிவருவது பற்றி பாங்கு நிர்வாகிகளிடம்  கேட்டிருப்பதாகவும், அவர்கள் பிரச்னையை கவனித்து வருவதாகவும் சவாண் சொன்னார்.

சில அரசுத் துறை பாங்குகளில் ஓவர்டைம் மிக அதிகமாக இருப்பது குறித்து பல மெம்பர்கள் கவலை தெரிவித்தனர். ஓவர்டைம் கிடைப்பதற்காக ஊழியர்கள் பகல் நேரங்களில் குறைத்து வேலை செய்கிறார்களா என்று அவர்கள் கேட்டனர்.

இவ்விஷயம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரு மெம்பர் சொன்னதை சவாண் ஏற்கவில்லை. இருந்தாலும் இவ்விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஒவ்வொரு பாங்கும் இவ்விஷயத்தைக் கவனித்து, ஊழியர்களிடம் இருந்தும், அவர்களுடைய யூனியன்களிடம் இருந்து அவசியமான ஒத்துழைப்பை பெற வேண்டும் என்று சவாண் மேலும் கூறினார்.

இந்த ஓவர்டைம் பிரச்னையைத் தீர்ப்பதோடு வேலையில்லா திண்டாட்டதை ஓரளவு தீர்க்கும்படியாக, அரசுடையை பாங்குகளில் பகுதி நேர ஊழியர்களை நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட ஒரு யோசனையையும் சவாண் நிராகரித்தார்.

சபையில் சவாண் சமர்ப்பித்த அறிக்கையில் இருந்து அரசுடைமை ஆக்கப்பட்ட பாங்குகளில் 1967-ல் ஓவர்டைம் தொகை ரூ.3.14 கோடியாக இருந்தது, 1972-ல் ரூ.6.17 கோடியாகிவிட்டது தெரிந்தது. சில பாங்குகளின் ஓவர்டைம் கணக்கு இதில் சேரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.