உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரமான எவரெஸ்டை ஜப்பானிய மலை ஏறும் பெண் ஒருவர் வெற்றிகண்டதாக நேபாள வெளி விவகார அமைச்சகம் இன்று அறிவித்தது. எவரெஸ்டின் உச்சியை அடைந்த முதலாவது பெண் இவரேயாகும்.
டோக்கியோ அருகே சைடோமாவைச் சேர்ந்த திருமதி ஜங்கோடாபி என்ற குடும்பப் பெண் (36 வயது), ஒரு ஷெர்ப்பாவுடன் எவரெஸ்ட் உச்சியை அடைந்தார்.
8848 மீட்டர் உயரம் உள்ள எவரெஸ்ட் உச்சியை அடையும் முயற்சியை அவர் 8500 மீட்டர் உயரத்தில் உள்ள 6-வது (கடைசி) முகாமில் இருந்து டெசரிங் என்ற ஷெர்ப்பாவுடன் மேற்கொண்டார்.
மேற்கு ஜப்பானில் நாரா என்ற இடத்தைச் சேர்ந்த திருமதி ஜகோஹிஸர்னோ (35 வயது) தலைமையில் 15 பேர் கொண்ட ஜப்பானிய பெண்கள் கோஷ்டி, எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியை துவங்கியது.
காலநிலை கோளாறு காரணமாக இம்முயற்சி வாபஸ் பெறப்பட்டதாக நோபாள ரேடியோ அறிவித்தது.
மூக்குக் கண்ணாடி அணிந்தவரும், மூன்று வயது பெண் குழந்தையின் தாயாருமான ஜங்கோடாபி, உலகிலேயே எவரெஸ்ட் உச்சியை ஏறிய முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1953-ல் சர் எட்மண்ட் ஹில்லாரியும், ஷெர்பா டென்சிங் நார்கேயும் எந்தப் பாதையில் சென்று எவரெஸ்ட் உச்சியை அடைந்தனரோ அதே பாதையில் ஜப்பானிய பெண்கள் கோஷ்டி சென்றது.
கடந்த 21 வருடங்களில் 35 பேர் எவரெஸ்ட் உச்சியை வெற்றிகண்டிருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


