சென்னை அடையாறு காந்திநகர் ராணி மெய்யம்மை பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆர்.கௌரி என்ற மாணவி, இந்த ஆண்டில் மார்ச் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதன்மையாகத் தேறியிருக்கிறார். அவர் 600-க்கு 556 மார்க் வாங்கியிருக்கிறார். அதாவது, 92.7 சதவீதம்.
தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இரண்டாவதாக வந்திருப்பவர், கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலைச் சேர்ந்த மாணவன் எஸ்.ஸ்ரீதரன். அவன் 548 மார்க்குகள் வாங்கியிருக்கிறான்.
இந்த ஆண்டில் மொத்தம் 2,25,971 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 58 சதவீதத்தினர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் தேறிய விகிதத்தைவிட இது 6 சதவீதம் அதிகம்.
இந்த ஆண்டில் முதன்மையான 32 இடங்களில் 269 மாணவர்கள் தேறியிருக்கிறார்கள். இவர்களில் 2 பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். 91 பேர் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதாவது, முதன்மையாக வந்துள்ள 269 பேரில் சுமார் 3-ல் ஒரு பகுதியினர் ஹரிஜன பிற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள். முதல் பத்துத் தரத்தில் 21 மாணவர்கள் வந்திருக்கிறார்கள்.
வயது சம்பந்தமான விதிமுறைக்குள் வராதவர்கள் தேர்வு முடிவுகள் நேரடியாக உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படும். மார்க் சர்ட்டிபிகேட்களை ஜில்லாக் கல்வி அதிகாரிகள் அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் மே 29-ம் மதேதி வழங்குவார்கள்.
தனிப்பட்ட முறையில் எழுதிய மாணவர்களைப் பொருத்தவரை, மார்க் சர்ட்டிபிகேட்டுகளைத் தபால் மூலம் நேரடியாக அனுப்ப அரசாங்கத் தேர்வு டைரக்டர் ஏற்பாடு செய்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


