தமிழகத்தில் தற்போதுள்ள மின்சார நெருக்கடி சமாளிக்கப்பட்டு விரைவில் சகஜ நிலை மீண்டும் ஏற்படுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் எஸ். ராமச்சந்திரன் உறுதி கூறினார். இந்தக் கோடையில் மின்சார வெட்டும் இராது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
நகரிலும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போதுமான மின்சக்தி வரவில்லை. இந்த மின்சாரப் பற்றாக்குறைக்கு கேரளம், நெய்வேலி, எண்ணூர் மின்சார நிலையங்களில் இருந்து வரும் மின்சார சப்ளை குறைந்ததே காரணம் என்று அவர் விளக்கினார்.
விரைவில் வழக்கமான மின்சார சப்ளை வழங்க நெய்வேலியும் கேரளமும் ஒப்புக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார். என்றாலும், மேலும் சில தினங்களுக்குச் சற்றுக் கடினமாகவே இருக்கும். ஆனால், பீதி அடைய எவ்விதக் காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.
எண்ணூரில் அதன் மூன்றாவது யூனிட் இயங்கவில்லை. அதன் காரணமாக, அதில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் 70 மில்லியன் வாட் பற்றாக்குறை ஏற்பட்டது. கேரளத்தில் இருந்து கிடைத்து வந்த 350 மில்லியன் வாட் சப்ளையில் 160 மில்லியன் வாட் மட்டுமே கிடைத்தது. நெய்வேலியிலும் சுரங்க வேலையில் ஏதோ கஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக, 350 மில்லியன் வாட்டுக்குப் பதிலாக 270 மில்லியன் வாட் மட்டுமே கிடைத்தது என்றார் அமைச்சர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


