சென்னைக்கு கிருஷ்ணா நீர் கொண்டு வரும் திட்டத்தை பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி வைத்தார். இந்த விழாவில், தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ், கர்நாடக முதல்வர் ஹெக்டே, மகாராஷ்டிர முதல்வர் வசந்த் தாதா பாட்டீல், மத்திய நீர்ப்பாசன அமைச்சர் ராம் நிவாஸ் மிர்தா ஆகியோர் பங்குகொண்டனர்.
சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரைக் கொண்டுவரும் குடிநீர் திட்டப் பணிகளைப் பிரதமர் தொடங்கி வைத்துப் பேசினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலை மற்றும் சர்வதேசப் பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக நமக்குச் சற்று கடினமான நிலை ஏற்பட்டிருந்தாலும், அதைச் சமாளிக்க மத்திய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
நாட்டுக்கு ஏற்படும் எல்லாவிதச் சோதனைகளையும் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் இருப்பதன் மூலம் சமாளிக்க முடியும். நல்ல பலத்துடன் செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
சென்னைக்கு கிருஷ்ணா நிதி நீர் கொண்டு வரும் இந்தத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் இங்குள்ள எல்லா மக்களுக்கும் இத் திட்டம் புது வாழ்வு தரும் என்றும் நம்புகிறேன்.
இந்தியா பல்வேறு தரப்பட்ட மக்கள் வாழும் ஒரு நாடு. அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவதன் மூலமே மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.
மத்திய அரசுக்கு எல்லை எதுவும் கிடையாது. பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு மாநிலங்களுக்கே உண்டு. மாநிலங்கள் அனைத்தும் மத்திய அரசின் உறுப்புகள். ஆகவே அவை அனைத்தும் பலத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது.
எல்லா மாநிலங்களும் தன்னிறைவு கொண்ட நிலையில் இல்லாமல் ஒன்றை ஒன்று நம்பி இருக்கும் சூழ்நிலை இருப்பதால் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாத அரசு இருப்பதில் பலன் எதுவும் இல்லை. குடிநீர் போன்ற அத்தியாவசியமான தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்போடு செயல்பட்டால் நன்மை கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கி இருப்பதாகவும் இதைப்போல் பல்வேறு பிரச்னைகள் கூட்டுறவு முயற்சிகள் மூலம் தீர்த்துக்கொள்ள வாய்ப்பினை உருவாக்கி இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தாம் அறிவித்த திட்டம் உருப்பெற்று இரு மாநில முதலமைச்சர்கள் இடையே ஒப்பந்தமாக மாறியது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும், அதற்காக சம்பந்தப்பட்ட இரு மாநில முதலமைச்சர்களை பாராட்டுவதாகவும் அவர் சொன்னார்.
உணவைவிட முக்கியமானது குடிநீர் என்பதால் எல்லா பகுதி மக்களுக்கும் குடிநீர் வசதி செய்து தர அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்துவிட்டதால் நாட்டின் முக்கால்வாசி பகுதிகளில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது என்றார் பிரதமர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


