மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்களும், பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் இரும்புத் தொப்பிகளை அணிவதைக் கட்டாயமாக்க வகை செய்யும் மசோதாவை ராஜ்ய சபையில் போக்குவரத்து அமைச்சர் ஜி.எல்.தில்லான் பிரேரித்தார்.
எனினும், தலைப்பாகை அணியும் சீக்கியர்களுக்கு இது பொருந்தாது. மோட்டார் வாகனங்கள் (இரண்டாவது திருத்த) மசோதா என்று இதற்குப் பெயர். விபத்து ஏற்பட்டால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு காயம் அல்லது மரணம் ஏற்படுவதைத் தவிர்ப்பதே மசோதாவின் நோக்கம் என்று, மசோதாவின் நோக்கங்கள், காரணங்கள் பற்றிய அறிக்கை கூறுகிறது.
மோட்டார் சைக்கிள்களுக்கு வேக வரம்பு நிர்ணயிக்கவும் மசோதா உத்தேசித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் ஒரு சாதனத்தைப் பொருத்தி அதை அமல் நடத்த உத்தேசிக் கப்பட்டுள்ளது.
மதுபானம் குடித்துவிட்டு மோட்டார் வண்டிகளை ஓட்டுவதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் மூச்சு சோதனைகளுக்கும் பரிசோதனைச் சாலை சோதனைகளுக்கும் உட்பட வேண்டும் என்று வகை செய்ய சட்டத்தில் புதிதாதக மூன்று பிரிவுகளைச் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளைக் குறைப்பதற்காக, இத்தகைய விபத்துக்குக் காரணமாயிருக்கும் குற்றங் களுக்கு - அதாவது குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவது அல்லது மோட்டார் சைக்கிளில் செல்வது, போதை மருந்து சாப்பிட்டுவிட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டுவது அல்லது கண்மூடித்தனமாக அல்லது அஜாக்கிரதையாக வண்டி ஓட்டுதல் போன்றவற்றுக்கு கடுமையான தண்டை அளிக்க மசோதா வகை செய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்! என்சிஆா்டிசி மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே ஒப்பந்தம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


