டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

16.12.1971 - வங்காளதேச விடுதலைப்போரில் பாகிஸ்தான் சரணடைந்த தினம் இன்று!

வங்காளதேச விடுதலைப் போர் 1971இல் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

DIN

வங்காளதேச விடுதலைப் போர் 1971இல் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. இப்போரில் இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்காளதேசம் உருவாக்கப்பட்டது.

பாகிஸ்தான் விடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகளாகப் பாகிஸ்தான் அரசு கிழக்கு பாகிஸ்தானுக்குக் குறைந்த அளவு நிதியுதவி கொடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை என்று கிழக்குப் பாகிஸ்தான் மக்கள் கண்டனம் செய்தனர். பாகிஸ்தான் அரசு வங்காள மொழியை ஆட்சி மொழியாக உறுதி செய்யவில்லை என காரணமாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் வெறுப்படைந்தனர். பல நிகழ்வுகள் காரணமாக கிழக்குப் பாகிஸ்தானில் விடுதலை போராட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசத்தில் முக்தி பாஹினி என்று அழைக்கப்பட்ட எதிர்ப்பு இராணுவம் உருவாக்கப்பட்டது.

1971இல் மார்ச் 26ஆம் தேதி விடுதலைப் போராட்டத்தை நிறுத்தும் பொருட்டு பாகிஸ்தான் இராணுவம் வங்காள பொது மக்கள் மீது தாக்குதல் செய்தது. இதனால் கிழக்கு பாகிஸ்தான் விடுதலை அறிவிப்பை வெளியிட்டு இந்த நாள் முதல் வங்காளதேசம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

மார்ச் முதல் ஜூன் வரை பல்வேறு வங்காளதேசத் துணைப்படைகள் முக்தி பாஹினியுக்கு இணைந்தன. வங்காளதேசத்தில் இருந்த பாகிஸ்தான் கப்பல்கள் மற்றும் பொருளாதார மையங்கள் மீது முக்தி பாஹினி தாக்குதல் செய்துள்ளது.

இப்போர் நடைபெறும்பொழுது இந்திய இராணுவமும் சோவியத் ஒன்றியமும் முக்தி பாகினிக்கு நிதியுதவி செய்துள்ளது. இதே நேரத்தில் ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுக்கு உதவி செய்துள்ளது. இதனால் டிசம்பரில் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் மேற்கொண்டது.

இந்திரா காந்தி போர் நிலையை கூற இந்திய இராணுவம் கிழக்குப் பாகிஸ்தான் மீது படையெடுத்தது. 13 நாட்களிலேயே போர் முடிந்து இந்தியாவும் முக்தி பாஹினியும் வெற்றி பெற்றன. டிசம்பர் 16ஆம் தேதி பாகிஸ்தான் தளபதி நியாசி சரணடைந்து வங்காளதேச மக்கள் விடுதலையை கொண்டாடியுள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.