சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

03.11.1957: விண்வெளிக்கு முதன் முதலில் உயிரினம் ஒன்று அனுப்பப்பட்ட தினம் இன்று!

ரஷ்ய புரட்சி நடந்ததன் நினைவாக ஸ்புட்னிக் என்னும் விண்கலம் ஏவப்பப்ட்டது.

News image
Updated On :3 நவம்பர் 2016, 7:14 am

DIN

ரஷ்ய புரட்சி நடந்ததன் நினைவாக ஸ்புட்னிக் என்னும் விண்கலம் ஏவப்பட்டது.  இந்த கலமானது  இந்த பயணத்தில் சூர்ய மற்றும் காஸ்மிக் கதிர்கள் பற்றிய ஆய்வுகளை செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் உலகை வியக்கச் செய்யும் விதமாக  லைகா என்கிற பெயர் கொண்ட நாய் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-1 விண்கலம் மூலம் விண்ணை நோக்கி பயணம் அனுப்பப்பட்டது.

இதன் மூலம் முதன்முதலில் விண்வெளியில் பயணம் போன உயிரினம் என்கிற பெருமை அந்த நாய்க்கு வந்து சேர்ந்தது. ஒரு அப்பாவி ஜீவனை கொடுமைப்படுத்துகிறார்கள் என பரவலாக பிராணிகள் நல ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்புக்குரல்கள் எழுந்தன . ஆனாலும் லைகா விண்கலத்தில் பயணம் செய்தது.

சில வாரங்கள் கழித்து லைகா என்னும் அந்த நாய் இறந்து போனதாக அறிவித்தார்கள்;ஆனால் அதன் பிறகுதான் விண்கலம் புறப்பட்ட சில மணிநேரத்திலேயே அதிக வெப்பம் மற்றும் பயம் காரணமாக லைகா இறந்து போனது தெரிய வந்தது.

ஆனால் அதன் மூலம் கிடைத்த தரவுகளைக் கொண்டு நிகழ்ந்த ஆய்வுகளின் பயனாக யூரிகாகரின் என்பவர் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் மனிதர் ஆனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.