மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

03.10.1990: கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி ஒன்றாக இணைந்த நாள்!

ஜெர்மனி என்பது மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு முக்கியமான நாடு. 82 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட நாடு.

News image
Updated On :2 அக்டோபர் 2016, 6:30 pm

ஜெர்மனி என்பது மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு முக்கியமான நாடு. 82 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும் ஜெர்மனி திகழ்கிறது.

ஜெர்மனி முதலில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக 1949 ஆம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என இரண்டு பகுதிகளாக பிரிந்து காணப்பட்டது.  கிழக்கு-ஜெர்மனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-ஜெர்மனிக்கு பான் தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-ஜெர்மனில் இருந்து பிரிக்க 1961 இல் புகழ் பெற்ற  'பெர்லின் சுவர்' கட்டப்பட்டது.

1989 இல் இந்த சுவர் உடைக்கப்பட்டு ஒன்றுபட்ட ஜெர்மனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது. பல்வேறு கட்ட சமாதான நடவடிக்கைகளுக்கு  பிறகு இரண்டு ஜெர்மனிகளும் 03.10.1990 அன்று ஒன்றாக இணைந்தது. ஜெர்மனி தற்போதைய நிலையில் 16 மாநிலங்களை  கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாக திகழ்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.