06.10.1893: புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி மேக்நாத் சாகாவின் பிறந்த தினம் இன்று!

இந்தியாவின் புகழ் பெற்ற  இயற்பியல் விஞானிகளில் ஒருவர் மேக்நாத் சாகா . 
06.10.1893: புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி மேக்நாத் சாகாவின் பிறந்த தினம் இன்று!
Updated on
1 min read

இந்தியாவின் புகழ் பெற்ற  இயற்பியல் விஞானிகளில் ஒருவரான மேக்நாத் சாகா  இவர் இன்றைய வங்கதேசத்திலுள்ள சியோரடலி எனும் ஊரில் 06.10.1893 அன்று சகன்னாத் சாஃகா என்ற சிறு மளிகை வியாபாரிக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார்.

இளம் வயதில் வறுமை காரணமாக  சாகாவை அவரது தந்தை வேலைக்கு அனுப்ப நினைத்தார். ஆனால் சாகாவின் ஆசிரியர்கள் தலையிட்டு, சாகாவின் பள்ளிப்படிப்பை தொடர்ச் செய்தனர். பின்னர் வங்காள பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தவர் படிப்பில் சிறந்து விளங்கினார். 

இவர் உருவாக்கி அளித்த 'சாகா அயனியாக்க சமன்பாடு' மிகவும் புகழ்பெற்றதாக்கும். இந்தச் சமன்பாடு விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதி இயல்புகளைப் பற்றி அறிய உதவுகிறது. சாகா தன் கடுமையான முயற்சியால் உருவாக்கிய சமன்பாடு, சூரியன், விண்மீன்கள் இவற்றின் வெப்பநிலை, அழுத்தம் போன்ற புறநிலை இயல்புகளை அறியவும் உதவுகிறது. இந்த சமன்பாட்டைஉருவாக்கி உலகிற்கு அளித்த பொழுது சாகாவுக்கு வயது 25 மட்டுமே ஆக்கும்.

இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் இவர் அமைத்த அடித்தளம் முக்கியமானது. புகழ்பெற்ற இயற்பியலாளராக அறியப்பட்டாலும் சாகா தீவிர சமுதாய நல நோக்குடைய சமூக ஆர்வலராகவே சிறு வயது முதல் இருந்துள்ளார்.

1948 இல் அவர் கொல்கத்தாவில் தொடங்கிய ஆராய்ச்சி நிறுவனம் இன்று அணுக்கரு இயற்பியலுக்கான சாகா நிறுவனம்  என்று பெயர் மாற்றப்பட்டு மிகச்சிறந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையமாக விளங்குகிறது. மேலும் தாமோதர் பள்ளத்தாக்கு, பக்ரா-நங்கல் மற்றும் இராகுட் அணைத்திட்டங்களுக்கு சாகா செய்த கள ஆராய்ச்சிகள்தாம் பெரிதும் உதவின.

அவர் உருவாக்கிய அயனியாக்க சமன்பாட்டை பெருமைப்படுத்தும் விதமாக 1927 இல் லண்டன் ராயல் சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பெயர் நோபல் பரிசுக்குப் (1935 - 36) பரிந்துரைக்கப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com