சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

06.02.1920: இந்திய சுதந்திர போராட்ட வீரர் மோதிலால் நேரு நினைவு தினம் இன்று!

மோதிலால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரும், இந்திய சுதந்திர போராட்ட வீரரும் ஆவார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2017, 6:30 pm

DIN

மோதிலால் நேரு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரும், இந்திய சுதந்திர போராட்ட வீரரும் ஆவார். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவக்ர்லால் நேருவின் தந்தையும் ஆவார்.

இவர் 1861ம் ஆண்டு மே மாதம் காஷ்மீரி பண்டித் குடும்பத்தில் பிறந்தார். ஜெய்ப்பூரில் வசித்து வந்த இவரது தந்தை, தில்லியில் காவலராக பணிபுரிந்தார். இவரது பாட்டனார், ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீஹிமன்றத்தில் வழக்கறிஞராயிருந்தவர்.

மோதிலால் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து, கேம்ரிட்ஜ் சென்று பார் அட் லா என்ற வழக்கறிஞர் பட்டம் பெற்றார். வழக்கறிஞராக வாழ்கையை ஆரம்பித்த மோதிலால் நேரு, காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்தார்.

1919–1920 மற்றும் 1928–1929 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இவர் பதவி வகித்தார். அதோடு சுயாட்சிக் கட்சி மூலம் ஆங்கிலேய அரசுக்கெதிராக போராடினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.