இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

30.05.1987: கோவா இந்தியாவின் 25-ஆவது மாநிலமாக மாறிய தினம் இன்று! 

கோவா பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை பட்டியலில் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலம் ஆகும்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:21 pm

DIN

கோவா பரப்பளவில் இந்தியாவின் மிகச்சிறிய மாநிலம் மற்றும் இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மக்கள் தொகை பட்டியலில் நான்காவது மிகக்குறைந்த மக்கள்தொகை உடைய மாநிலம் ஆகும்.

இந்தியாவில் உள்ள மேற்கு கடற்கரை பகுதியான கொங்கனில் அமைந்துள்ளது. இது வடக்கு திசையில் மகாராஷ்டிரா மாநிலத்தையும், கிழக்கில் கர்நாடகா மாநிலத்தையும் மற்றும் தெற்கு திசையில் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்டு மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.

பனாஜி இம்மாநிலத் தலைநகரம் ஆகும். வாஸ்கோடகாமா இங்குள்ள மிகப்பெரிய நகரமாகும். இதன் வரலாற்றுப் புகழ் வாய்ந்த நகரமாகத் திகழ்கின்ற மார்கோ 16 ஆம் நூற்றாண்டில் வியாபாரிகளாக குடிபுகுந்து விரைவில் நாட்டையே வெற்றி பெற்ற போர்ச்சுகீசியர்களின் கலாச்சாரம், செல்வாக்கு பெற்றிருந்ததை தற்பொழுதும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

இது போர்ச்சுகீசியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக 450 ஆண்டுகளாக நீடித்தது.1947 இல் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, போர்த்துக்கல் இந்தியாவில் உள்ள தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் ஆட்சியுரிமையை திரும்பபெறுவதற்கான இந்தியாவுடனான உடன்படிக்கையை மறுத்தது. இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12 இல் மேற்கொண்ட ஆப்ரேஷன் விஜய் என்னும் போர் நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களை கைப்பற்றி இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது. கோவா உள்ளிட்ட டாமன் மற்றும் டையூ ஆகியவை மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட இந்திய யூனியன் பிரதேசங்களாகும்

இங்குள்ள புகழ்வாய்ந்த கடற்கரைகள், இறைவழிபாட்டுத் தலங்கள் மற்றும் உலகப் புகழ் வாய்ந்த கட்டடக்கலைகள் ஆகியவை கோவாவிற்கு ஒவ்வொரு வருடமும் அயல்நாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளைக் கவருவதாக உள்ளது. இது தாவரம் மற்றும் விலங்கு சார்ந்த வனவளங்களைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியைச் சார்ந்துள்ளது. இது பல்லுயிரியம் சார்ந்த முக்கியத்தலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு கோவா இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது. டாமன் மற்றும் டையூ ஆகியவை தற்பொழுது வரை யூனியன் பிரதேசங்களாகவே தொடர்கின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.