

அந்தக் காட்சி இன்னும் கண்களைவிட்டு அகவில்லை. மரண பயம் அறியாத அந்தக் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்க கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் சென்ற வேன் நீரில் பாய்ந்து மூழ்கியது. தப்பிச் செல்ல வழியில்லாமல் 9 குழந்தைகள் ஜலசமாதி ஆகிவிட்டனர். இந்தத் துயரச் சம்பவம் கடந்த டிசம்பர் 3-ம் தேதி வேதாரண்யம் அருகே நடந்தது.
தமிழகத்தை உலுக்கிய இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி வேன்களில் அளவுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றிச் செல்லக் கூடாது. போதிய அனுபவமுள்ள டிரைவர்களை கொண்டு வாகனத்தை இயக்க வேண்டும் என்பது உள்பட பல உத்தரவுகளை போக்குவரத்துத்துறை பிறப்பித்தது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான வாகனங்கள் தகுதிச் சான்று இல்லாமல் இயங்கி வந்ததும், போதிய அனுபவம் இல்லாத டிரைவர்கள் பள்ளி வாகனத்தை இயக்கி வந்தததும் தெரியவந்தது. அப்போது சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
ஆனால் தனியார் வேன்கள் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வது இன்றளவும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகி உள்ளது
பெற்றோர்கள் தவம் இருந்து, தங்களது குழந்தைகளுக்கு அட்மிஷன் வாங்கி பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். தற்போது கோடை கால விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. பாதுகாப்பாக தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியதும் பெற்றோரின் கடமையாகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரையில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் ஒன்றரை கோடி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தான் பணம் கொடுத்து பள்ளி வேன்களில் பயணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், பள்ளி வேன்களில் குழந்தைகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்கின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் உள்ளது.
இம்மாதிரியான தவறுகளை போக்குவரத்துத்துறை மட்டும் சரிசெய்துவிட முடியாது. மாணவர்களின் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்த வேண்டியது முழு பொறுப்பாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் அலுவலக அதிகாரிகள் கூறியது:
பள்ளி வாகனங்களில் தீவிர சோதனை தொடர்ந்து நடத்தப்படும். அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், குறைபாடான வாகனங்கள், பழைய வாகனங்கள், போதிய ஆவணமில்லாத வாகனங்கள் மற்றும் முன் அனுபவமில்லாத டிரைவர்கள் பணியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த வாகனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வாகனங்கள் போதிய விதிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு போக்குவரத்துத் துறைக்கு உள்ளது. அந்த வகையில் தொடர் சோதனைகளை நடத்தி கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே விரும்பத்தகாத சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க முடியும்.
அதையும் தாண்டி பள்ளி வேன்களின் உரிமையாளர்களும், பள்ளிகளும் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டால்...
உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.