"ஸின்ஸி'ல் ஒத்த திருப்புகழ்!
அரும்பு மீசை குறும்புப் பார்வையோடு "ஸின்ஸ்' குழுவினரின் இசை நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்திலிருக்கும் அலையன்ஸ் ஃபிரான்கைஸ் அரங்கத்தில் நடைபெற்றது. ஏ.ஆர். ரஹ்மானால் சிறந்த இசைக் குழு என்று பாராட்டப்


அரும்பு மீசை குறும்புப் பார்வையோடு "ஸின்ஸ்' குழுவினரின் இசை நிகழ்ச்சி சென்னை, நுங்கம்பாக்கத்திலிருக்கும் அலையன்ஸ் ஃபிரான்கைஸ் அரங்கத்தில் நடைபெற்றது. ஏ.ஆர். ரஹ்மானால் சிறந்த இசைக் குழு என்று பாராட்டப்பட்டு, அவரது மேற்பார்வையில் ஓர் இசை ஆல்பத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் இந்தக்
குழுவினர்.
வயலின்,மேண்டலின், கீ-போர்ட், டிரம்ஸ், மிருதங்கம், கடம், கஞ்சிரா ஆகிய வாத்தியங்களை அவர்கள் ஒருங்கிணைந்து வாசிக்க... ரசிகர்களின் காதுகளில் ஒலித்ததோ கர்நாடக இசையின் ராகங்கள்! அச்சு அசலாக திருப்புகழின் "முத்தைத்தரு பத்தித் திருநகை'யை வாசித்தது அசத்தலாக இருந்தது! குழுவின் சார்பாக கிஷோர் இசைக் குழு தொடங்கிய விதம் பற்றியும் அவர்களின் நோக்கங்கள் குறித்தும் நம்மிடம் பேசியதிலிருந்து...
""நானும் அனிருத் மற்றும் விவேக் ஆகியோர் பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவர்கள். பள்ளியில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நாங்கள் சேர்ந்து இசை சார்ந்த பணிகளை கவனித்துக் கொள்வோம். இதற்காக பள்ளி அளவில் முதலில் "ஸின்ஸ்' இசைக்குழுவைத் தொடங்கினோம். எனக்கு மிருதங்கம் தவிர மேற்கத்திய தாள வாத்தியங்களையும் வாசிக்கத் தெரியும். அனிருத்துக்கு மேற்கத்திய இசை தெரியும். விவேக்கிற்கும் இரண்டு இசையிலும் பரிச்சயம் உண்டு. சிறந்த இசைக் குழுவுக்காக ஒரு தொலைக்காட்சியில் போட்டி நடந்தது. இதற்காக அனந்தகிருஷ்ணன், லியோன் ஜேம்ஸ், ரவி சங்கர் (கடம்), சுவாமிநாதன் (கஞ்சிரா) ஆகியோரை எங்களின் குழுவில் இணைத்துக் கொண்டோம். அதன் மூலமாகத்தான் ஏ.ஆர்.ரஹ்மானின் பாராட்டையும் பெற்றோம்.
முழுக்க முழுக்க கர்நாடக இசையை மட்டுமே ரசிப்பதற்கு இன்றைய தலைமுறையில் பலரும் தயாராக இல்லை. முழுக்க திரை இசைப் பாடல்களைக் கேட்பதற்கும் தயாராக இல்லை. இந்த இரு பிரிவினருக்கும் இடையே கர்நாடக இசையின் கூறுகளை மேற்கத்திய இசை வாத்தியங்களின் வழியாக எங்களின் கற்பனையைச் சேர்த்து வித்தியாசமாகத் தரும் முயற்சிதான் எங்களின் இசைக் குழு.
ஸ்டேட் பாங்க் மற்றும் பல கார்ப்பரேட் நிறுவனங்களின் விழாக்களுக்கும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கும் நிறைய நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். நாங்கள் நிகழ்ச்சிகளில் வாசிப்பதும் நாட்டை, பகுதாரி, சரஸ்வதி, சாருகேசி போன்ற ராகங்களைத்தான். இந்த ராகங்களை விஸ்தாரமாக எங்களின் கற்பனையோடு வாசிக்கிறோம். இது கேட்பவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருவதாக இருக்கும். திருமண வரவேற்புகளின்போதும் எங்களின் இசை நிகழ்ச்சிகளை நாங்கள் தற்போது நடத்துகிறோம். எங்களின் இந்த பாணி இசையை ரசிப்பதற்கு ரசிகர்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு இதுவே சாட்சி!'' என்றார்.
டெயில் பீஸ்: புகழ்பெற்ற பரூர் பாரம்பரியத்தில் வந்த வயலின் வித்துவான் எம்.ஏ.சுந்தரேஸ்வரனின் மகன் அனந்தகிருஷ்ணன். பிரபல மிருதங்க வித்துவான் கே.வி.பிரசாதின் மகன் கிஷோர். கடம் வித்துவான் வைக்கம் கோபால கிருஷ்ணனின் மகன் ரவிசங்கர். கஞ்சிரா வித்துவான் செல்வ கணேஷின் மகன் சுவாமிநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...