வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கருத்துச் சொல்லும் குறுத்துப் படங்கள்!

யூத் ஃபிலிம் மேக்கர்ஸின் நான்காம் ஆண்டு குறும்பட விழா சென்னை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் சமீபத்தில் நடந்தது. விழாவை யூத் ஃபிலிம் மேக்கர்ஸின் நிறுவனர் கோவிந்த் கே. பாலாஜியும், úஸôன் ம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:00 am

ரவிக்குமார்

யூத் ஃபிலிம் மேக்கர்ஸின் நான்காம் ஆண்டு குறும்பட விழா சென்னை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் சமீபத்தில் நடந்தது. விழாவை யூத் ஃபிலிம் மேக்கர்ஸின் நிறுவனர் கோவிந்த் கே. பாலாஜியும், úஸôன் மீடியா நிறுவனர் விஜய சுதாகரும் இணைந்து நடத்தினர். விழாவில் ஐம்பதுக்கு மேற்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றிலிருந்து "அப்பாவி', "துருவ நட்சத்திரம்', "கண்டுபிடி', "நடந்த கதை', "கர்மா' ஆகிய படங்கள் முறையே சிறந்த திரைக்கதை (ராஜேஷ்), சிறந்த படம்(அரவிந்த்), சிறந்த எடிட்டிங் (அனில் கிருஷ்ணா), சிறந்த இயக்குநர் (பொன்.சுதா), சிறந்த ஒளிப்பதிவு (ஓம் பிரகாஷ்) ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு விருது அளித்து,   திரைப்பட இயக்குநர்கள் கெüதமன், சற்குணம், ஹோசிமின், நடிகர் சாந்தனு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் செருப்பு அணிவதற்கு எவ்வளவு போராட வேண்டியிருந்தது என்பதை "நடந்த கதை' குறும்படம் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியது. இதில் குரல் தானம் கொடுத்திருக்கும் கவிஞர் அறிவுமதியின் குரலில்தான் எத்தனை உணர்ச்சிப் பிரவாகம்? பார்ப்பவர்கள் அனைவரையும் நெகிழவைக்கும் படம் இதுதான்.

வாழ்த்திப் பேசியவர்களில் "மகிழ்ச்சி' படத்தின் இயக்குநர் கெüதமனின் பேச்சு, வரும் தலைமுறைக்கு நம்பிக்கை தருவதாக இருந்தது.

""பத்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய முதல் படம் வந்தது. இப்போதுதான் "மகிழ்ச்சி' வந்திருக்கிறது. இடையில் எனக்குப் பிடிக்காத எத்தனையோ வேலைகளைச் செய்வதற்கு திரைத்துறையில் எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் எனக்குப் பிடித்த சில பணிகளை சின்ன திரையில் நான் செய்துகொண்டிருந்தேன். எத்தனை முறை விழுகிறாய் என்பது முக்கியமில்லை, எத்தனை முறை எழுகிறாய் என்பதுதான் முக்கியம்...'' என்னும் இவரது பேச்சு, தொழிலில் இருக்கவேண்டிய நேர்மையை அழுத்தமாக வெளிப்படுத்தியது.

""குறும்படங்களைத் திரையிடுவதற்கு இன்றைக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அதற்கான விழாக்கள் குறைவாகவே நடக்கின்றன. ஒரு கலைஞன் அவன் வாழும் காலத்திலேயே அவனுக்குரிய அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்பதற்குத்தான் இந்த விழா'' என்றார் யூத் ஃபிலிம் மேக்கர்ஸின் கோவிந்த் கே பாலாஜி.

"அப்பாவி' குறும்படத்தில் மகன் எந்தவிதமான சலனத்துக்கும் இடம் தராமல் படித்துக் கொண்டிருக்க, அவருடைய தாய்க்கு மகன், காதல் வலையில் விழுவதாக கனவு காண்பதாக படத்தை முடித்திருப்பது நல்ல திருப்பம். "துருவ நட்சத்திரம்' படத்தில் குழந்தைகள் வீட்டில் பெரியவர்களின் அவசியத்தை, பாசத்தை வெளிப்படுத்தும் படைப்பு.

ஒவ்வொரு குறும்படமும் அற்புதமான செய்திகளைக் கொண்டிருந்தன.

எத்தனையோ தொலைக்காட்சிசேனல்கள் இருக்கின்றன. அவை எத்தனையோ நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. திரைப்படத் துறைக்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சும் புதியவர்களின், எளியவர்களின் இந்தக் குறும்பட திரைப்பட விழா நிகழ்ச்சிகளையும் குறும்படங்களையும் ஏதாவது ஒரு தொலைக்காட்சி சேனல்கள் முன்வந்து ஒளிபரப்பினால், ஓர் அற்புதமான திரைத்துறை சார்ந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய புண்ணியம் கிடைக்கும். உலக அளவில் இருக்கும் பல தமிழர்களுக்கும் இந்தக் குறும்படங்களில் பொதிந்திருக்கும் பல நல்ல கருத்துகள் சென்று சேரும். செய்வார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.