ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பட்டாசு சத்தம்: ம. அஹமது நவ்ரோஸ் பேகம்

Updated On :1 நவம்பர் 2016, 10:10 am

பட பட படார் என்ற சத்தம் 
தெருப் பையன்கள்  கைகளில் கம்பி மத்தாப்பு,
முகங்களில் வெற்றிக் களிப்பு.

பயத்தில் தொண்டைக் குழிக்குள் 
இருந்து சத்தம் வந்தது வயது போனவர்களுக்கு.
முதுமைக்கோடுகளுடன் கோபக் கோடுகளும்  
முகத்தில் தோன்ற வசவு மழை பொழிந்தனர்.
அசராமல் அடுத்ததைப் பற்ற வைத்தனர், பையன்கள்.

தெருவில் தெறித்து விழுந்த தீச்சிதறல்கள் கண்டு 
அஞ்சி, தெருவோரம் அண்டினர் குமரிப் பெண்கள்.
இன்னுமொன்று வெடிப்பதற்குள் காதுகளைப் 
பொத்திக் கொண்டு ஓடிச் சென்று 
தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தனர்.

பட்டாசு சத்தம் அடங்கியும்,
அடங்காத நெடியும் புகையும் 
வருவோர் போவோர் சுவாசப் பைகளுக்குள் 
பாதுகாப்பாக அடங்கின.

கேடென்று தெரிந்தும் தவிர்க்க முடியாமல் 
குழந்தைகளின் சந்தோஷத்திற்காக நாம் 
விடாமல் பற்றிக்  கொண்டிருக்கும் 
விஷயங்களுள், பட்டாசும் ஒன்று.

முடிந்த வரை பட்டாசு சத்தம் குறைப்பதால்  
ஒலி மாசு, புகை மாசு குறைத்து காற்றையும் 
நம் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.