பட்டாசு சத்தம்:  பூ. சுப்ரமணியன்,

Updated on
1 min read

வண்ண வண்ண பட்டாசுகள்
விதவிதமான வெடிச் சத்தம்
மனித வாழ்க்கைத் தத்துவம்
மனதில் என்றும் உணர்ந்தால்
மனித வாழ்வு சிறக்கும் !

மனிதனே ! மனிதநேயம்
உன்னில் இருக்கும் வரைதான்
மண்ணில் சுழன்று வருவாய்
சுட்டிக் காட்டிடும் தரையில்
சுழலும் சுற்றும் தரைச்சக்கரம் !

பணம் பதவி நிரந்தரம்மனி
தா மனதில் நினைத்து
வானில் பறந்து சென்றாலும்
முடிவில் மறைந்து விடுவாய்
மண்ணுக்குக் கீழே.

வண்ண வண்ண ராக்கட்டுகள்
வானில் விரைந்து வெடித்து
மண்ணில் வீழ்வதைப் போல்
அமைதியான உன் மனதில்
அசுரக் குணம்  புகுந்தால்

நீண்ட பட்டாசுத் திரியில்
நெருப்பு வந்து முத்தமிட்டால்
வெடித்து  சிதறுவதைப்போல்
மனித வாழ்க்கையே சிதறி விடும் !

தன் வலது கரம் கொடுக்கும்
தான தர்மங்கள் எல்லாம்
இடது கைக்குத் தெரியாமல்
சுயநலமின்றி நீ வாழ்ந்தால்
சிறுவர் மத்தாப்பில் சிதறும்
ஒளிச் சிதறலில் தோன்றும்
நட்சத்திரமாக மின்னுவாய் !

சின்ன சின்ன பட்டாசுகள்
வண்ண வண்ணப் பட்டாசுகள்
கவனமுடன் கொளுத்தி
விபத்தில்லா தீபாவளியை
ஆனந்தமாக கொண்டாடுவோம் !                  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com