கரங்களிலே கந்தகத் துளை தொட்ட தாலே
கரமெங்கும் வெந்துதான் போகுதன் றோ?
இருந்தாலும் பட்டாசை வாங்கி வெடித்தே
இன்புற்று மகிழ்ந்தே சிரிக்கின் றோம்!
திருநாட்டில் உற்பத்தி யாகும் இந்த
திரிவைத்த பட்டாசை புறம் தள்ளி
வெறுத்தே சீனத்து பட்டாசை வாங்கு வோர்
வெடியைத்தான் வைத்து விட்டார் தேசத்துக்கே!
படபடக்கும் பட்டாசு சத்தம் கேட்டே
பளிச்சென்று முகத்தை ஆக்கி நின்று
சடசடவென சட்டைப் பையின் காசையே
சடுதியிலே செலவைத் தான் செய்கின்றார்
கடைக்கோடி ஏழையின் முகத்தில் கொஞ்சம்
களிப்புமிக ஏறுவதற்கே உதவி செய்தால்
படபடக்கும் பட்டாசே தேவை இல்லை
பகிர்ந்துண்டு வாழ்ந்தாலே மகிழ்ச்சி தானே!
புஸ்ஸென்றே சத்த த்தோடு வானம் நோக்கி
பாயுகின்ற வெடியைத்தான கொளுத்தி விட்டு
உஸ்ஸென்றே ஓடித்தான் ஒதுங்கி நின்று
ஓரமாய் வேடிக்கைதான் பார்ப்ப தற்கு
கஷ்டமாய் கவலைப் படும் ஏழைக் கூட்டம்
கவலைகளை தீர்த்தாலே ஒளி வெள்ளம் தானே
நஷ்டமா வரப்போகுது நமக்கு என்றும்
நல்லவை செய்தேதான் நிமிர்ந்து நிற்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஏப். 16-இல் நாமக்கல்லில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிரசாரம்: ராஜேஸ்குமாா் எம்.பி. தகவல்
மேலப்பாளையத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

