தீபாவளிக்குத் தீபாவளி தெருவெங்கும்
தீயொளியுடன் வெடிக்கும் பட்டாசு எங்கும்
வெடிக்கும் சத்தம் நிறைந்திருக்கும் எங்கும்
பொட்டு வெடியும் பட்டதும் சத்தம் எழுப்பிடுமே!
பட்டாசு வைக்கும்போது பட்டென வெடிப்பது
சட்டென மனம் பரவசம் அளிப்பது
வெடித்துச் சிதறி விழுபுண் தோன்றுவது
வேண்டாத வேதனையல்லவா பாலகரே!
சுதந்திரமாய் வாழும் சிட்டுக்குருவிகளை
சுற்றுச்சூழலைக் காக்கும் சின்னப்பறவைகளை
புல்லினங்களை விருத்திக்கும் புள்ளினங்களை
வெடிச்சத்தம் மிரட்டி அடிக்குதே பாலகரே!
அச்சத்தால் பூமிவிட்டு அழிகின்றனவே
மிச்சம் இருப்பது எச்சங்கூட இல்லையே!
காரியத்திற்குக் காசை ப் பயன்படுத்தலாம்
கரியாக்கும் பட்டாசுக்கேன் வீணாக்குவது, பாலகரே!
பிறக்கைபோதும் இறக்கும்போதும் வெடிகள் பலிவாங்குவது
சிறுவர் இறப்புக்கள், எப்போதும் வாடிக்கையாகி விட்டதே!
பட்டாசுப்பறைச் சத்தம் செவிப்பறையைச் செவிடாக்கும் சிட்டாய்ப் பறந்து வெடிப்பதுவும் வேண்டுமோ, பாலகரே?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

