/
பட்டதாரி என்றாதல் பவித்திரமாம் ; கல்லாமல்விட்டுவிட பின்னாளில் வேதனையே ! ---- நட்டமுறக்காண்பதைத் தவிர்ப்பதுவே கடமையென உணராமல்மாண்புதனை இழக்கத்தகு மா ?கல்விதரும் சிறப்பெல்லாம் காலத்தால் அழியாதாம்,செல்வாக்கைத் தருவததன் சிறப்பாகும் ! ---- பல்கலையில்தேர்ந்துவிடக் கிட்டுவதும் தீர்க்கமின்றி வேறில்லை ,வேறெதுதான் இணையாகும் விளம்பு !இளமைதனில் கற்காமல் இருந்துவிட வாழ்க்கைக்களமதிலே வெற்றிதனைக் காணுவமோ ? ---- விளக்கமிதைஊட்டுவதே அதன்பெருமை , உன்னதநற் கல்விகற்றோர்நாட்டின்முது கெலும்பென்றே நம்பு !உற்றநற் பலமென்றே உலகவர் ஏற்றதெலாம்கற்றிட்ட நன்றானக் கலவியையே ! ---- பெற்றிட்டசெல்வங்களில் இன்னதுவே சீர்பெருமை மிக்கதெனஎல்லோரும் கூறுவர் இசைந்து !இளமதனில் கல்வியதும் எட்டிக்காய் என்றாகும் ;உளமிதனைத் தவறெனவே உணரட்டும் ! ---- விளக்கமிதைஊட்டுவதே பெற்றவர்தம் உன்னதநற் கடமை அதேமாட்சிதனைக் கூட்டுவிக்கு மாம் !உன்னதநற் கல்வியதே உயர்வூட்டும் புகழ்கூட்டும் ;இன்னதனை மனம்மறக்கா திருக்கட்டும் ! ---- மன்னவராய்,இம்மண்ணை ஆண்டவர்கள் இருப்பிடங்கள் தெரியவில்லைகம்பனுக்கு இருப்பதனைக் காண் !கல்வியெனும் செல்வமது கரையாதாம் மறையாதாம் ;எல்லையற்ற புகழ்கூட்டும் என்னாளும் ! ---- செல்வக்களஞ்சியத்தை ஈட்டித்தரும் , காலமெலாம் துணைநிற்கும் ;விளக்கமதை மறப்பதுவும் வீண் !கற்றறிந்த அறிஞர்தமை கலங்கரை விளக்கமென்பார் ;உற்றநல் அறிஞர்தமை உலகறியும் ! ---- மற்றவர்போல்மட்டற்ற புகழ்கண்டு மன்றமதில் தலைநிமிர்ந்திடபட்டதாரி என்றாகப் பார் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

