ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பட்டதாரி: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated On :7 நவம்பர் 2016, 9:20 am
நெல்விளைக்க  விதைவிதைத்துப்   பார்த்தி  ருந்தால்            நெடும்பயிரில்  காய்த்ததெல்லாம்  பதர்கள்  போலகல்வியின்று   வணிகமாக   ஆன  தாலே            காசிருப்போர்   எல்லோரும்   பட்டம்  பெற்றார்எல்லோரும்   பட்டதாரி   ஆன   போதும்            ஏற்றதிறன்   இல்லாத   கார   ணத்தால்நல்லதொரு    பணியவர்க்குக்   கிடைக்க   வில்லை            நாட்டிலவர்   வேலையில்லா   பட்ட   தாரி !தம்குழந்தை    மனநிலையைக்   கேட்டி   டாமல்            தம்குழந்தை   திறன்களினை    அறிந்தி   டாமல்தம்கனவைப்   பெற்றோர்கள்   திணிப்ப   தாலே            தமக்கதிலே   விருப்பம்தான்   இல்லா   போதும்அம்மாக்கள்   கனவுகளைச்   சுமையாய்   ஏற்றே            ஆழ்ந்துமனம்   பதியாமல்   படிப்ப   தாலேசெம்மையான   நுண்ணறிவு   பெற்றி   டாமல்            செல்லாத   பட்டங்கள்   பெறுகின்   றார்கள் !விருப்பங்கள்   அறிந்துகல்வி   புகட்டம்   போதே            வித்துக்கள்   முத்துகளாய்   விளையும்  நன்றாய்தரும்கல்வி   இந்நாட்டை   உயர்த்து   கின்ற            தகுகல்வி   ஆகும்மனம்   ஒன்றிக்  கற்றால்அருங்கல்வி  ஏழையர்க்கும்   கிடைக்கச்   செய்தால்            அறிவாளி   புதைந்திடாமல்   வருவான்   மேலேபெருமையாகும்   பட்டங்கள்   பட்ட   தாரி            பெரும்மாற்றம்   சாதனைகள்    படைத்தே  வெல்வான் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.