/
தந்தை பட்டாதாரி தலைமகன் நான் இன்று பட்டதாரிவிந்தையிது நிகழ்ந்த போதும் வேலையேதும் கிட்டவில்லை.பட்டாதாரி உழைப்பதனால் பலர்நாங்கள் உண்கின்றோம்‘பட்டதாரி என்னால் தான் பலமடங்கு செலவினமாம்’பகலெல்லாம் உழைக்கின்ற பட்டாதாரி யுடன்சேர்ந்துபழஞ்சேற்றில் கால்வைக்க படிப்பு தடுக்கிறது, கால்குழாயை சுருட்டி மடக்க கூனிக் குறுகுகிறேன்; நல்உழைப்பைப் பள்ளிக்கூடம் சொல்லித் தரவில்லை.கல்லூரி தந்ததுவே கல்விஎன எண்ணி நானும்சொல்லாமல் கொள்ளாமல் சோம்பேறி ஆகிவிட்டேன்.அம்மாவின் பொறுமையும் அப்பாவின் அனுபவமும்சும்மா வந்ததனால் சுயபடிப்பு ஆகாதோ?தந்தை யிடமிருந்து சரிபாதி நிலம்பெற்ற இன்றேபட்டதாரி நானுமொரு பட்டாதாரி ஆகிவிட்டேன்வெட்டி முறித்து வேலியை சீராக்கி விவசாயவேலையில் ஈடுபட விருப்பமுடன் முன்வந்தேன் .வேலையில்லா பட்டதாரிஎன வேறொருவர் சொல்லவேண்டாமே ; நிலத்தில் வேலையும் இருக்கின்றதுவேண்டிய விளைச்சல் வருகின்றது ; இன்றுநான்பட்டதாரி பட்டாதாரி ; பட்டாதாரி பட்டதாரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு

ஈரான் - அமெரிக்க இடையே தொடரும் போரால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும்! - ஏ.எம். விக்கிரமராஜா

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

