மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வழி தவறிய பயணங்கள்: கா.ந.கல்யாணசுந்தரம்  

Updated On :14 நவம்பர் 2016, 11:12 am

தாய்மொழி அறிய  பாடம் கற்றல் 
தெளிவாகும் அறிவார்ந்த சிந்தனை 
பிறமொழிக் கல்வி பயிலின் மழுங்குமே   
திறன்மிகு புத்திக் கூர்மை !

தாய்மொழிப் பகன்று வாழ்தல் 
தகைசான்ற வாழ்வின் விளக்கம் !
அயல் மொழிப் பேசி நித்தம் 
அன்னைமொழி மறக்கலாமா ?

பொதியென புத்தகங்கள் பள்ளிக்கு 
விதியென்று பிள்ளைகள் சுமக்கலாமோ ?
விளையாட்டாய்க் கல்விதனை நாளும் 
விளம்பிடில் வாழ்வு சுவைக்குமன்றோ !

தனித்திறன் பகுத்தறிந்துப் பாங்காய் 
இனித்திடும் கல்விதனைக் காலத்தே 
விதைத்திட மறக்கலாயின் தலமறியா 
யாத்திரையாய் வழிதவறிய பயணமாகும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.