மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

செல்லாக் காசு: கு. கொ. முத்துலிங்கம்

Updated On :21 நவம்பர் 2016, 11:44 am

காசு பணம் துட்டு
என பல பெயர்கள் உண்டு அதற்கு
அது இருக்கும் பலரின் பையில்
அதன் அதிகாரமோ! மத்திய அரசின் கையில்
பாட்டி காலத்து அரையணா காலணா
அஞ்சி பைசா பத்துப் பைசா காசு
சுறுக்குப் பையில் இருக்கும்போதே
ஆனது செல்லாக் காசு
தாத்தா காதுமடலில் இருந்தது
இருபது பைசா காசு சுருட்டுக்காக..
பெட்டிக்கடைக்குப் போவதற்குள்
ஆனது செல்லாக்காசாக..
அப்பா கொடுத்தார் ஐந்து ரூபாய் நோட்டு
பள்ளிக்கூட பரிட்சைக்காக..
இன்றோ! அதுவும்
ஆனது செல்லாக் காசாக..
ஆறு நாள் வேலை பார்த்து
கையில் வாங்கினேன்
ஒரு ஆயிரமும் ஐநூறும் நோட்டாக
பார்த்த ஆசை தீருவதற்குள்
ஆனது செல்லாக் காசாக..
கருப்பு பணத்தை மீட்க வேண்டுமாம்
கார்பரேட்காரனுக்கும்
கழனியில் கால் வயிறு கஞ்சியுடன்
உழைக்கும் விவசாயிக்கும் ஒரே சட்டமா?
'மை' வைத்து சோதனையிடுவது
ஏழைகளை மட்டுமா?
புதிதாக விடும் இரண்டாயிரம்என் பி
ள்ளைக்கு செல்லுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.