எழுத்து ! கவிஞர் இரா .இரவி !

Updated on
1 min read
மனிதகுலம் அறிவு பெற்றவுடன் வடித்தது மகத்தான எழுத்து மறக்க முடியாதது !உலகப் பொது மறையை அழியாமல் நமக்கு உருப்படியாகத் தந்தது ஓலைச் சுவடி எழுத்து  !கம்ப இராமாயணம் சிலப்பதிகாரம் உள்ளிட்ட கற்கண்டு இலக்கியம் உணர்த்தியது எழுத்து!வாசிக்கும் பழக்கம் பலருக்கு  வந்ததற்கும் வானளாவ புகழ் கிடைக்கக் காரணம் எழுத்து !காதல் கடிதம் எழுதுவதற்கு அன்றும் இன்றும் காதலர்களுக்கு துணை  நின்றது  எழுத்து!ஒரு எழுத்து மாறி அன்று பொருள் கொண்டதால் உலகப் போர் நிகழ்ந்த வரலாறும் உண்டு !எழுத்தை அறிவித்தவன் இறைவன் என்று இயம்பிடும் அளவிற்கு உயர்ந்தது எழுத்து !எழுத்து அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை என்பது முக்கியமான புள்ளி விபரம் இன்று !எழுத படிக்கத் தெரிந்தவர்கள் என்ணிக்கைஇன்று உயர்ந்திடக்  காரணம் எழுத்து  !குழந்தைகள் முதன் முதலில் நெல்லில் குதூகலமாக எழுதி பார்ப்பதும் எழுத்து !ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதை ஆர்வமாகப் பார்க்க வைத்தது எழுத்து !அடிமை விலங்கை முறித்துப் போட்டு அனைவருக்கும் விடுதலை தந்தது எழுத்து !மக்களாட்சியின் நான்காவது தூணாக மக்களைக் காக்கும் அரண் எழுத்து !வாகன இயக்குபவர்களுக்கு சரியான வழியினை  சாலையில் காட்டுவது எழுத்து !கணினி வந்த பிறகும் அனைவருக்கும் கணினியில் துணை நிற்பதும்  எழுத்து !பார்வையற்றவர்கள் விரலால் தடவி படிப்பதற்குத் துணை நிற்பதும் எழுத்து !காட்டுமிராண்டியாக இருந்த மனிதனை கல்வி கற்ற மனிதனாக மாற்றியது எழுத்து !தலைஎழுத்து என்ற ஒன்று இல்லவே இல்லை தவறான கற்பனைக் கற்பிதம் தலை எழுத்து !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com