வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பொம்மை: கவிஞர் " இளவல் " ஹரிஹரன்,

Updated On :10 அக்டோபர் 2016, 10:53 am
பொய்மெய்யாய் ஆனதோற்றம் பொம்மை யென்பார்         பொம்மையெனக் கைப்பாவை யாக ஆடும்மெய்யான மாந்தரிங்கு மிக்கோ ருண்டு          மேதினியில் நாடகமாய் வாழ்க்கை வாழும்பொய்யாக வாழ்வோரைப் பொம்மை யென்றே          புரிந்தோர்கள் புகழுரையாய்ப் புகல்வ துண்டு.ஐயமின்றி அகிலமெலாம் ஆண்ட வன்தன்         அலகிலாக்கைப் பாவையதன் விளையாட் டன்றோ!யோசித்துப் பார்த்தாலே நாமெல் லோரும்         யாரோஓர் கைப்பொம்மை யாக ஆடநேசிக்கின்ற காதலதன் கையில், நின்ற         நிறைவாழ்வு பெற்றோரின் பாசக் கையில்,வாசிக்கின்ற காலமதில் குருவின் கையில்         வளஞ்சேர்க்க பிள்ளைகளின் வளரும் கையில்,மோசஞ்செய் அரசியலில் தொண்ட ரென்றே         மோகிக்கும் தலைவரவர் கையில், நம்பும்ஆசிரமச் சாமியார்தன் கையில், இங்கே          அவரவரும் ஒருவகையில் அடிமை யாகும்பாசத்தைக் காட்டுகின்ற உறவின் கையில்           பணங்கொண்டோர் நீட்டுகின்ற பணத்தின் கையில்ஊசலாடும் பொம்மையென ஆடு கின்றார்,           உலகோரும் அறிந்தவுண்மை யன்றோ! கைகள்வீசியாடும் குழந்தையர்கைப் பொம்மை யாதல்           விளையாட்டின் மகிழ்வாகத் தெரியு மன்றோ!                         

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.