தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பொம்மைகள்: கா.ந.கல்யாணசுந்தரம் 

Updated On :10 அக்டோபர் 2016, 11:49 am

பார்த்த
பொம்மைகளையே
மீண்டும் மீண்டும்
பார்த்தவாறே
அலுத்துப்போன
குழந்தை

தாத்தாவின்  மடிமீது
தூங்கிப்போனது!

சிதறிக்கிடந்த
பொம்மைகள்
மீண்டும்
உயிர்ப்பித்தெழ
நேரமாகும்....!

தாத்தாவும்
பொம்மைகளோடு
பொம்மையாய்
குழந்தையை
சுமந்தவாறே
தூங்கிப்போனார் !

எங்கிருந்தோ
பாடல் ஒலித்தது....
' நான் மறுபடியும்
குழந்தையாக
பிறக்க வேண்டும் - அன்னை
மடிமீது தலைவைத்து
படுக்கவேண்டும் ..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.