பொம்மைகள்: ரா.பார்த்தசாரதி

Updated on
1 min read
பொம்மைகளை  சேர்த்து  வைப்பது நவராத்திரி விழாவே பெண்களுக்காக  ஒன்பது நாளும் கொண்டாடும் விழாவே குழந்தைகளுக்கு மிகவும் மகிழ்ச்சி தருவது பொம்மைகளே அது பிடிக்காவிட்டால்  உடனே உடைப்பதும் குழந்தைகளே !தொன்றுதொட்டு  வைப்பதே பாரம்பரிய பொம்மைக்  கொலு பொம்மைகளை பல வடிவில் வைப்பதே நவராத்ரி  கொலு எல்லா கடவுள் பொம்மைகளை வைப்பதே தனிச் சிறப்பு அதிலும் முப்பெருந்தேவியர்கள் வைப்பது மிகச் சிறப்பு !பொம்மைக்கு உயிர் இல்லை,  பலவகை  உருவங்கள் உண்டு பொம்மைகளை மண், உலோகத்தாலும் செய்பவர்களுண்டு எல்லா காலத்திலும் பொம்மைகள்  விற்கப்படுவதுண்டு தசரா விழாவில்  மண் பொம்மைகள் மட்டும் விற்பனையுண்டு!பொம்மைகள் பெரும்பாலும் மண்ணால் செய்யப்படுவதுண்டு வண்ணங்கள் பூசி அதனை மிகவும் அழகு படுத்துவதுண்டு மனிதன் சிலரை தன்  கைபொம்மையாக ஆட்டி படைக்கின்றான் எல்லாமிருந்தும் சில சமயங்களில் பொம்மையாய் காட்சியளிக்கின்றான்!நாடகமே உலகம், மனிதர்கள் ஆடுவதோ ஓர் பொம்மலாட்டம் இறைவனால் ஆட்டிப்படைக்கும் நாம் அவனது கைபொம்மைகள் அவன் கையில் நூல்பிடித்து நம்மை ஆட்டுவிக்கின்றான் அவனவன்  விதியினை  அவனே  தீர்மானிக்கின்றான் ! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com