மௌனச் சிறகுகளாய் மாயமாகும்
மனசென்னும் அலைகடல்.
மேவியே நெஞ்சையள்ளி மென்னி
முறித்திடும் காதல் பிசாசாய்.
கணப்பொழுதில் கலைந்திடும்
காத தூரமே ஓடிடும் மேகமாய்.
தினமும் வாஞ்சையாய் நெஞ்சில்
தீயை மூட்டியே தெறிக்கவிடும்.
கிளை விட்டு கிளை செல்லும் மந்தியாய்
கீழான எண்ணத்தில் தாவிடும்.
முளைவிட்டு வளர்த்திட்ட முள்ளாய்
மூச்சை மெல்லவே அடக்கிடும்.
அசையாத சிறகாகி அலையாமல்
ஆழ்கடல் நீர்போல உறங்கிடும்.
திசையில்லா தீந்தென்றலாய்
திகைத்து நின்று ஒலமிடும்.
குதிரைக்கு கடிவாளம் போட்டால்
குந்தகம் கிடையாது இனிமேல்.
புதிரான மனதுக்கு எந்நாளும்
பொறுமையே வேண்டும் நமக்கு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

