திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மனம் என்னும் மாயப் பேய்: கே.நடராஜன்

Updated On :17 அக்டோபர் 2016, 11:05 am
மனம் ஒரு குரங்குதான் ...இல்லை என்று சொல்லவில்லை  நான் !இங்கும்  அங்கும் அலையும் மனக் குரங்கை அடக்கி வைக்கும் ஒரு குரங்காட்டியாக  நீ இருக்கலாம்... தவறில்லை !மனக் குரங்கு தறி கெட்டு நெறி தவறி அடங்கா குரங்காட்டம் போடும் நேரம் உன் மனமே ஒரு பேயாக மாறும் ,உன்னை தன் மாய வலையில்  சிக்கவைத்து ..! உன்னையும்  மாற்றும் அந்த மாயப் பேய்  தன் கூட்டத்தின்  ஒரு அங்கமாக !சிக்கவும்   வேண்டாம் அந்த  மாய வலையில் ...மாயாவியாக நீ மாறவும் வேண்டாம் !...  ஒரு நல்ல குரங்காட்டியாக மட்டும் நீ இருந்தால்!   உன் மனக் குரங்கும்  ஒரு குரங்காக மட்டுமே அலையும்  என்றைக்கும்...  நீ போடும் "கோட்டை"  தாண்டாமல் !நல்லன ஏற்று  அல்லன ஒதுக்கி உன் மன சிற்பம்  நீ செதுக்கினால்  அல்லல் என்றும் இல்லை உனக்கு  தம்பி ! உன் மனம் என்றும் நல்ல மனமாக மணக்கும் ...உன் வாழ்வும் இனிக்கும் ! இந்த ஊரும்  நாடும் உன்னைப்  போற்றி  வணங்கும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.