/
மனம் ஒரு குரங்கு என்பது முற்றிலும் உண்மை
மனத்தைக் கட்டுப்படுத்துவது மனிதனின் கடமை !
குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதால்
குரங்கின் குணம் கொஞ்சம் இருப்பது உண்டு !
விலங்கு குணம் மனிதனுக்கு வரும் அதனை
விவேகமாகச் சிந்தித்து அகற்றிட வேண்டும் !
மனம் இரண்டு வகை உண்டு உணர்ந்திடுக
மனதில் தேவதை உண்டு சாத்தானும் உண்டு !
தேவதை நல்லது மட்டுமே சொல்லும்
தவறாது கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறக்கும் !
சாத்தானின் கெட்டதுக்குச் செவி சாயத்தால்
சீரழிவிற்கு உடன் வழி வகுக்கும் !
அடுத்தவரின் உயர்வினைக் கண்டு
அந்த தேவதை மனம் மகிழ்ந்து வாழ்த்தும் !
சாத்தானோ பொறாமைத் தீ வளர்க்கும்
செவி சாய்க்காமல் இருப்பது நலம் !
எண்ணம் போல வாழ்க்கை என்பது
என்றும் முற்றிலும் உண்மை !
நல்லது எண்ணிட நல்லது நடக்கும்
அல்லது எண்ணிட அல்லது நடக்கும் !
உதவி செய்யும் உள்ளம் இருந்தால்
உயர்வு வாழ்க்கையில் தானாக அமையும் !
தனக்காக தன்னல வாழ்வு விடுத்து
தன்னை நம்பியவர்களுக்காக வாழ்வது சிறப்பு !
என்ன நினைத்தாய் என்று கேட்டால் உடன்
இன்னது நினைத்தேன் எனச் சொல்லும் !
நினைவு நல்லது எப்போதும் வேண்டும்
நினைவு செயல் சொல் நல்லது வேண்டும் !
மனதாலும் மற்றவருக்கு தீங்கு நினைக்காது
மனத்தைச் செம்மையாக வைத்திருக்க வேண்டும் !
கெட்ட எண்ணங்களை உடன் நீக்கிட வேண்டும்
நல்ல எண்ணங்களை மட்டுமே வைத்திடல் வேண்டும் !
தான் என்ற அகந்தை ஒருவருக்கு வந்துவிட்டால்
தள்ளிவிடும் படு பாதாளத்தில் கவனம் வேண்டும் !
மனசாட்சிக்குப் பயந்து வாழ்வதே சிறப்பு
மனம் ஒரு கோயில் மதித்து வாழ வேண்டும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
மண்டாடி தமிழ்ப் புத்தாண்டு போஸ்டர்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா புதிய சாதனை!
வீடியோக்கள்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

