இன்றொரு பௌர்ணமி நாள்
மாலை நேரம் மழைக் காலம்
மிதமாய் வீசிய தென்றல் காற்று!
சோலை வனத்தில் இருப்பதாய்
வறண்ட பூமியில் நடைப் பயின்று
வீட்டின் வாயிலைத் தொட்டேன்…
கதவைத் திறந்து உள்ளேச் சென்றேன்
கும்மென்று இருட்டிய அறை
அரை நிர்வானத்தில் ஜன்னல்…
எட்டிப் பார்த்தேன் தொட்டும் பார்த்தேன்
இன்பம் பொங்கி வழிந்திடக் கண்டேன்
அடடா!
வள்ளை நிறத்தில் கொள்ளை அழகு
எத்தனை எத்தனை கவிஞர்கள்
தீட்டித் தள்ளினாலும் தீர்ந்த பாடில்லை…
நிலா மெல்ல நகர்ந்தது -
மேகம்தடுத்தது சொல்லத் தெரியவில்லை
அத்தனையும் அழகுதான்…
கண் கண்டகாட்சியில் வெட்கத்தில்
தலைக் குனிந்தேன் வெடுக்கென்று
வேதனை தொண்டைக்கு எட்டியது…
அன்று பதினைந்தாம் நாள் அமாவாசை
நிலவே உன்னை மறக்க முடியவில்லை
பார்வையில் எத்தனை முரண்பாடுகள்…
காரியம் மறந்து போனேன் கருமமே
கண்ணாயினேன் உன்னை காட்டி
சோரூட்டிய பாட்டியின் பழைய நினைவில்…
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

