திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜன்னல் நிலா: அழகூர். அருண்.  ஞானசேகரன்

Updated On :24 அக்டோபர் 2016, 10:49 am
ஜன்னலில்   தெரிவதெலாம்   நிலவென்று    எண்ணுவதும்
                 சழக்கென்றே   உணரவேண்டும் ;
         சமுதாயம்   சீர்கெட்டுப்   போவதை   இதுகாட்டும்
                 ஜனங்கள்மனம்   மாறவேண்டும் !
உன்னதம்   என்றிந்த   எண்ணமதும்   ஆகிடுமோ ,
                 உற்றநற்   பண்புமிதுவோ ;
         உயர்வாக   இதுதன்னைத்   திரைதன்னில்   காட்டுவதும்
                 ஊர்கெட்டு   நாசமுறவோ ?

இன்னதனை   உணராதப்   போதினில்   கிட்டுவதும்
                 இழிவன்றி   வேறுயெதுவோ?
         இளங்கன்று   பயந்தனை   அறியாது  என்பார்கள்,
                  இன்னதும்   அத்தகையதோ ?
மென்மனம்   தறிகெட்டு   அலைபாயும் ,  எல்லைதனை
                  மீறாமல்   இருக்கவேண்டும் ;
         மேலானக்   காதலின்   இலக்கணம்   இதுவல்ல ;
                  மிகையிலா   உண்மையிதுவே !

தென்னையிளங்   கீற்றின்   நடுவே
            தெரிகின்ற   நிலவே   அழகு;
இன்னதற்   கிணையென   உலகில்
            எதனைநாம்   சொல்லவும்   தகுமோ ?
ஜன்னலின்   வழியாய்த்   தெரிவதோர்
            சிகப்புநிலா   என்றிடும்   போதில்
அன்னதே   பேரழ   கென்பதாம்
            அரும்புகளின்   எண்ணந்   தனிலே !

வண்ணத்துப்   பூச்சியென   வானமதில்   சிறகடிக்கும்
எண்ணமதும்   நம்மின்   இளமையிலே  ---- ஜன்னல்
நிலவுதனின்   எழில்தனிலே   நெஞ்சமதைப்   பறிகொடுக்க ;
உலகவரின்   இயல்பான   உணர்வு !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.