திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஜன்னல் நிலா: முனைவர் சி. அருள் ஜோசப் ராஜ்

Updated On :24 அக்டோபர் 2016, 10:44 am

உலகத்தோர் ரசிப்பார்கள் நிலவு தன்னை!
    உரிமையுடன் வரவேற்பார் மக்கள் உன்னை!
சலசலக்கும் நீரதனில் நிலவு கண்டு
   சகலருமே இரவுதன்னில்  மகிழ்தல் உண்டு
நிலவொளியில் கடலழகு;  வானில் நீந்தும்
   நிறமஞ்சள் பிறையழகு; உன்னைப் பாடா
ஞாலத்து கவிஞரில்லை!  மழலை யர்கள்
   ஞானத்தில் அம்புலியாய் உதயம் கொண்டாய்!

என்றென்றும் காதலர்க்கே துணையாய் நின்றாய்
   எந்நாளும் உறங்கவைத்தே எழுந்து சென்றாய்!  
வான்குதித்து மலையேறி  கடல்தாண்டியே
   வந்தாய்நீ!  மங்கைபோல அழகு கூட்டி
வென்றாய்நீ! ரகசியமாய் என்னைக் காண
   வெண்ணிலவாய் என்வாசல் வந்தே நின்றாய்
நான் கதவு சார்த்திடவே ஏனோ நீயே
   நான் பார்க்க ஜன்னலோரம் வந்தே நின்றாய்!   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.