தண்ணீருக்கு இரத்தம்:  H ஹாஜா மொஹினுதீன்

Updated on
1 min read
தண்ணீருக்காக இரத்தம் சிந்தி தவிக்கிறது தமிழகம் !
போராட்டங்களெல்லாம் பொழுதுபோக்காய்  மாற -
அடிதடியெல்லாம் அரசியலாகிறதே !
பொதுசொத்துக்களை அழிக்கிறாய் !
பொதுமக்களை வதைக்கிறாய் !
பொல்லாத வீரனென்று -
பொட்டத்தனத்தை காட்டுகிறாய் !
உடலுக்குள் செல்லும் இரத்தத்தை -
கைகளுக்கும் கால்களுக்கும் போகாது  தடுத்தால் ?
உயிர் இருந்தும் ஊனமன்றோ?  
"பாரத தாயின்" நிலை இதுதானே !
உழைப்பின்றி வரும் தண்ணீரை உனதாக்க -
உனக்கென்ன உரிமை?
தடுப்பணை போட தயிரியம் தந்தது யார் ?
இயற்கையை அரசியல் ஆக்க நினைத்தால் -
இல்லாது போவாய் !
இதயம்  கனத்தால் -
இமயமலையும் கலங்கும் ! 
இரும்பு கரம்கொண்டு ஒடுக்கமுடியாத சட்டம் -
ஒளிந்துகொண்டதா, ஓய்வெடுக்ககிறதா ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com