/
ஊரெல்லாம் சாத்தான்களின்உற்சாகக் கொண்டாட்டம்!தீராத வியாதியாய் எங்கும்தொடர்ந்திடும் போராட்டம்!பகலெல்லாம் தீவிர நோட்டமிட்டு,பாதுகாப்புக்கு 'ஹெல்மெட்' போட்டு,'புல்லட்'டில் மெல்ல அருகில் வந்து -பறந்திடுவார் தங்கச்சங்கிலி பறித்து!பள்ளிவிட்டு வந்த செல்லமகள்செல்லரித்த சோகச் சித்திரமாய்...சொல்லிலே வடிக்கவே நா கூசும்சாத்தானின் மன்மத அட்டகாசம்!காதலை ஏற்று, பச்சைக்கொடிகாட்டாவிட்டால் கன்னியருக்கு -காலனாகும் ஒருதலைக் காதலனின்கொடூர கந்தக 'அமில வீச்சு'! நாட்டையே சூறையாடி நாளும்கோடிகளில் உருண்டு புரளும்'நச்சுக் கிருமி'கள் செத்தொழியநம்மிடமில்லை 'கிருமி நாசினி'!கலி முற்றும் காலம் நம்மைகாத்தருள வேண்டிய நம்மூர்'காவல் தெய்வங்களே' இன்று'கையூட்டின்' மயக்கத்தில்! ஆதாரம் இல்லை யெனில்'அக்மார்க்' குற்றவாளியே சர்வசாதாரணமாய் தப்பிக்கலாம்சட்டத்தின் ஓட்டை வழியே!நியாயத் தராசு சில நேரம்நிலை தடுமாறித் தள்ளாடுது!நீதி தேவதையே சமயத்தில்நீதியைத் தேடிச் செல்லுது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

