சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

நீதியைத்தேடி: பாவலர் கருமலைத்தமிழாழன்

Updated On :23 செப்டம்பர் 2016, 4:56 am
ஆதியிலே   புறாவிட்ட   கண்ணீர்க்   காக            அரிந்துசதை   அளித்துமன்னன்   நீதி   காத்தான்வாதியாக   பசுஅடித்த    மணியைக்   கேட்டு            வழங்கிட்டான்   நீதியினை   மகனைக்   கொன்றுஏதிலியாய்   சிலம்புடைத்த    பெண்ணிற்   காக            ஏந்தியுயிர்    தந்துநீதி   காத்த   மண்ணில்நீதிவிலை   போகாதெனும்    நம்பிக்   கையில்            நீதியினைத்    தேடுகின்றார்   கிடைக்கு   மென்றே !பண்ணிசைத்துக்   காவிரியாள்   நடந்தா   ளென்று            பகர்கின்ற   பாடல்கள்   பலவி   ருந்தும்கண்முன்னே   காட்சிதரத்   தடைவி   தித்துக்            கன்னடத்தான்    சிறைக்குள்ளே   அடைத்து   வைக்கக்கண்ணெல்லாம்   பூரிக்க   வயல்கள்    பூத்துக்            கண்டிட்ட    முப்போகம்   கனவாய்ப்   போகத்தண்ணீர்க்காய்   நீதியினைத்   தேடித்   தேடித்            தவிக்கின்றான்   விவசாயி   தமிழ  கத்தில் !காலந்தான்   கடந்தபோதும்   உச்ச   மன்றம்            காவிரியாள்    விலங்கொடித்துத்   தீர்ப்ப   ளிக்கப்பாலமாக    இருக்கின்ற   நடுவண்   ஆட்சி            பசுதானா   தோலணிந்த   புலியா   என்னும்கோலத்தின்   ஐயத்தைத்   தீர்க்கும்   வண்ணம்            கோல்சாயா    நடவடிக்கை   எடுக்க   வேண்டும்சீலமுடன்   ஒற்றுமையாய்    இந்தி    யாவும்            சிறப்புறவே   நேயமுடன்   வாழ   வேண்டும் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.