மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நிலாவிடு தூது –கவிஞர் கே. அசோகன்

Updated On :4 பிப்ரவரி 2019, 10:06 am
வானவீதியில் உலவிடும் மங்கை – பால்வெண்மையில் குளிர்பொழி கங்கைகானமிசை காதலர்தம் துணை – அழகுகன்னியர்க்கோ உன்னெழிலே இணை!மாதம்தனில் ஒருபொழுதே ஓய்வு – நின்மங்கல அழகினிலே ஏன் தேய்வு?தூதுபோவாய் கூடிடும் காதலிக்கு – உன்தூதையும் வெறுப்பர் பிரிவாலே!அலைமோதும் கடலினும் ஒளிவாய் – நின்அழகுகண்டு மழலை திறக்கும் கனி-வாய்மலைமீதும் ஓடியாடி தவழ்வாய்! –இம்மண்மீது ஒளியென மிளிர்வாய்இயற்கையன்னை தந்தாளே எமக்கு – வரும்இரவுகளில் துணையாய் ஒளிவிளக்கு!மையல் கொண்டேன் உன்றன் மீதே – என்மோகம்தீர அழைத்துவா காதல்-மாதே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.