எந்தனுயிர்க் காதலியே!இனியவளே!தூயவளே!பந்துக்குள் காற்று பதிந்து கிடப்பதுபோல்உந்தன் நினைவால் உடற்பந்தில் உயிர்க்காற்றுநின்று நிலவிடுமே! நெஞ்சை நிறைத்திடுமே!உன்பார்வை பட்டதுந்தான் உலகம் தெரிந்ததடி!உலகத்துப் பொருள் யாவும் உற்சாகம் பெருக்குதடி!கலகங்கள் வந்தாலும் காட்சிகள் மாறினாலும்உளத்தின் அடியினிலே உன்முகந்தான் பதிந்ததடி!காதலியே நீயும் கண்ணசைத்தால் போதுமடி!உந்தன் விருப்பத்தை ஒன்றும் விட்டிடாமல்என்றும் நிறைவேற்றி இனிமை தொடர்ந்திடவேநின்று நான் செயலாற்றி நெஞ்சை நிமிர்த்திடுவேன்!கட்டளையிடு காதலியே உந்தன் கண்ணசைவால்!நித்திரையைப் போக்கியிங்கு நிம்மதியைக் குலைத்தெடுக்கும்அதிகார வர்க்கத்தை அநீதியையே தினம் செய்யும்அயோக்கியக் கும்பலையும் அடியோடே வேரறுப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.