ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நீ கண்சிமிட்டினால் : கவிஞர் நம்பிக்கை நாகராஜன்

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 11:32 am

கவிதைமணி

சந்திக்கும் 
ஓர்நொடி
சிமிட்டும்
கண்களால்தான்
பல சாம்ராஜ்யங்கள்
உருண்டோடி 
உருத்
தெரியாமல்
மறைந்திருக்கிறது

உலகத்தில்
மாபெரும்
காவியங்கள்
எல்லாம்
ஒயிலாய்…
ஒய்யாரமாய்
சந்திக்கின்ற
கண்களின்
சிமிட்டலில்
உருவானவைதான்

கவிச்சக்கரவர்த்தி
கம்பன்
அந்த கம்பனின்
ஒரே மகன்
அம்பிகாபதி

அவன் மட்டும்
அமராவதியின்
கண் சிமிட்டலை
சந்திக்காதிருந்தால்
தமிழகத்திற்கு
இன்னுமொரு
கவிச்சக்கரவர்த்தி
கிடைத்திருப்பான்

யூ டூ பூரூட்டஸ்
என்று “சீசர்”
தன் இன்னுயிரை
இழந்ததெல்லாம்    
அரசியல் 
நண்பர்கள் செய்த
கண் சிமிட்டல்களின்
காரணந்தானே ?

வானத்தில்
இருந்தாலும் சூரியன்
பூமியைப் 
பார்த்து
செய்கின்ற
கண் 
சிமிட்டல்
மண்ணுக்கு
ஒளியாக
நிறைகிறது

கார் மேகங்கள்
செய்து கொள்ளும்
காதல் விளையாட்டுக்
கண் சிமிட்டல்
பயிர் செழிக்கவும்
உயிர் பிழைக்கவும்
மழையாக
பொழிகிறது

இரண்டு கண் என்பதால்
யாரும்
இரண்டு வகையில் 
கண் சிமிட்டக்
கூடாது

மனிதா நீ
திறன் நோக்கிக்
கண் சிமிட்டல் நன்றே…
ஆனால்
அறன் நோக்கி
கண் சிமிட்டல்
அனைவருக்கும் 
நன்றே !
நன்றே !
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.